”திருச்சி சூர்யாவிற்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை” – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்.. - Tamil News | in a petition filed by trichy surya tamilnadu government answered that no protection necessary know more in detail | TV9 Tamil

”திருச்சி சூர்யாவிற்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை” – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். மேலும் இதே கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவருகிறது என திருச்சி சூர்யா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”திருச்சி சூர்யாவிற்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை” - உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்..

சீமான - திருச்சி சூர்யா

Published: 

07 Nov 2024 19:15 PM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சி சூர்யா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி காவல்துறை தலைப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது அப்பா திருச்சி சிவா பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நான் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

சீமானால் தன் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்ட திருச்சி சூர்யா:

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். மேலும் இதே கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.

நான் குடியிருக்கும் வீட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த மாதம் காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும் படிக்க: கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு அரசு விதிக்கும் உரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளேன். எனவே எங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ” தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது. இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதலமைச்சர்.. சொன்னது என்ன?

இதேபோல் சாட்டை துரைமுருகன் தரப்பில் இவ்வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி இடையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பற்றியும், நாம் தமிழர் கட்சியினர் பற்றியும் அவதூறான செய்திகளை திருச்சி சூர்யா பரப்பி வருகிறார். இது தொடர்பான சட்டரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் மீது குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாட்டை துரைமுருகனின் இடையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி காவல்துறை தலைப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

பாதாம் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் சரியாகுமா..?
15 நாட்களுக்கு ஒருமுறை கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி..?
கருப்பு நிற புடவையில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்
புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்