5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Weather : அதிதீவிர மழையுடன் தீவிர புயல்.. தமிழகத்துக்கு பிரதீப் ஜான் கொடுத்த எச்சரிக்கை!

Pradeep John | தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கன்னியாகுமரி, சேலம், தென்காசி உள்ளிட்ட 30 மாவட்ட்டங்களில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

TN Weather : அதிதீவிர மழையுடன் தீவிர புயல்.. தமிழகத்துக்கு பிரதீப் ஜான் கொடுத்த எச்சரிக்கை!
பிரதீப் ஜான்
vinalin
Vinalin Sweety | Published: 04 Aug 2024 20:19 PM

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை : சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கன்னியாகுமரி, சேலம், தென்காசி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்சியாக அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தில் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இதையும் படிங்க : கோயில் விழாவில் திடீரென சாய்ந்த ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய மக்கள்.. அடுத்து நடந்தது என்ன?

அடுத்த 10 நாட்களில் அதிதீவிர மழையுடன் தீவிர புயல் – பிரதீப் ஜான்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் அதிதீவிர மழையுடன் மிகவும் தீவிரமான புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வட சென்னையை தவிர தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் சென்னை கிழக்கில் கனமழை வெளுத்து வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Indian Army: வயநாடு சம்பவம்.. சிறுவன் எழுதிய கடிதத்தால் கண்கலங்கிய இந்திய ராணுவம்!

இதேபோல ஆகஸ்ட்  6  மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest News