5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

President Draupadi Murmu: இன்று தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.. பயணத்திட்டம் என்ன?

ஹெலிகாப்டரில் உதகைக்கு வரும் குடியரசுத் தலைவர் ராஜ்பவனுக்கு செல்கிறார். 3 நாட்கள் அதாவது இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வரை ஊட்டியில் தங்குகிறார். ஊட்டி வெலிங்டனில் நாளை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு பயிற்சியில் உள்ள அதிகாரிகள், ராணுவ கல்விப்பிரிவு அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடுகிறார்.

President Draupadi Murmu: இன்று தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.. பயணத்திட்டம் என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Nov 2024 11:18 AM

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இன்று வருகை தரும் குடியரசு தலைவர் ஊட்டி, திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்துனராக கலந்துக்கொள்கிறார். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை டெல்லியில் இருக்கும் பாலம் விமானப்படையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், நீலகிரிக்கு செல்கிறார். இதற்காக ஊட்டியில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தலைவரில் வருகைக்காக ஊட்டி முழுவது போலீசார் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் பயணத் திட்டம் என்ன?

ஹெலிகாப்டரில் உதகைக்கு வரும் குடியரசுத் தலைவர் ராஜ்பவனுக்கு செல்கிறார். 3 நாட்கள் அதாவது இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வரை ஊட்டியில் தங்குகிறார். ஊட்டி வெலிங்டனில் நாளை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு பயிற்சியில் உள்ள அதிகாரிகள், ராணுவ கல்விப்பிரிவு அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடுகிறார். இன்று முதல் வரும் சனிக்கிழமை காலை வரை குடியரசுத் தலைவர் அங்கு தங்குகிறார்.

மேலும் படிக்க: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. ஃபெங்கல் புயலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

பின்னர் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் குடியரசுத் தலைவர் சூலூர் செல்கிறார், அதனை தொடர்ந்து அங்கிருந்து தனி விமானம் மூலம திருச்சி புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். அங்கு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்n சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்யும் குடியரசுத் தலைவர்:

திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்த பின் மாலை 6.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றடைகிறார்.

4 நாட்கள் தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருகை தரும் குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி திருவாரூர், திருச்சி மற்றும் உதகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளும் ரூட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: டிசம்பர் மாதத்தில் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. பட்டியல் இதோ!

இந்நிலையில் வங்கக்டலில் ஃபெங்கல் புயல் உருவாகும் நிலையில், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை முதல் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நிகழ்ச்சிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Latest News