5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Trains: ஆயுத பூஜை, தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சிறப்பு ரயில்கள்: அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகை காலம் தான். மற்ற மாதங்ககளே காட்டிலும் அக்டோபர் மாதத்தில் வரும் பண்டிகை நாட்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுககு செல்வார்கள். இந்த பண்டிகை காலங்களில் மக்கள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, சத் பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 6 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Special Trains: ஆயுத பூஜை, தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Sep 2024 12:31 PM

நாட்டில் மிக முக்கியமான அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கக்கூடிய பொது போக்குவரத்தாக ரயில் சேவை இருக்கிறது. ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறைந்தது சில வாரங்களுக்கு முன்பாவது டிக்கெட் புக் செய்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் கிடைக்கிறது. அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகை காலம் தான். மற்ற மாதங்ககளே காட்டிலும் அக்டோபர் மாதத்தில் வரும் பண்டிகை நாட்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுககு செல்வார்கள். அதேபோல, புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. இதனால், 120 நாட்களுக்கு முன்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பண்டிகை காலம்:

மேலும், தட்கலிலும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தட்கலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் மிகப் பெரியா சவாலாக இருக்கும். இதனால், பயணிகள் டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். இந்த பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

வரும் அக்டோபர் 9,10ஆம் தேதிகளில் ஆயுத பூஜை, துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும், அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையும், நவம்பர் 7,8ஆம் தேதிகளில் சத் பூஜையும் கொண்டாடப்படுகிறது.

Also Read: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

இந்த பண்டிகைகளில் வட மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும். இதனால், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் ஆண்டுதோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நாடு முழுவதும் 6 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

6 ஆயிரம் சிறப்பு ரயில்கள்:

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ள. தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக 12,500 பெட்டிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டில் மட்டும் இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு கோடி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். கடந்த 2023ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில் மொத்தம் 4,429 ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரும் பண்டிகைகளுக்கு சுமார் 6000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு எத்தனை சிறப்பு ரயில்கள்?

பண்டிகை காலங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து லட்சக்கணக்காணோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இருப்பினும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். அதுவும் வரும் அக்டோபர் மாதத்தில் ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த பண்டிகை நாட்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read; உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது ஏன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

அதன்படி, முக்கிய மாவட்டங்களுக்கு மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  அதாவது, 34 சிறப்பு ரயில்கள் 302 சேவைகளாக இயக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 268 சேவைகள் அடங்கிய 28 சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Latest News