5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Metro Rail: சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ ரயில்.. எங்கே? எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் அதிக கட்டணம் என்பதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தாத நிலையில், இன்று பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். சென்னையில் பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Chennai Metro Rail: சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ ரயில்.. எங்கே? எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Sep 2024 11:33 AM

இந்தியாவிலேயே முதல்முறையாக (டபுள் டக்கர்) ஒரே தூணில் இரண்டு அடுக்கு மெட்ரோ இரயில் பாலம் சென்னையில் அமைய உள்ளது. இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, குஜராத், ஆந்திரா, பெங்களூர், கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயிலின் பயன்பாடு உள்ளது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சத்தை சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்டத்தில் வல்லுநர்கள் உருவாக்கி வருகின்றனர். மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் அதிக கட்டணம் என்பதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தாத நிலையில், இன்று பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். சென்னையில் பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் முதல் கட்டமாக 54.1 கிலோமீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமாகவும் ஒரு மாதத்திற்கு ஒரு கோடியை நெருங்கும் அளவில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் உருவாகி அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் 45.4 கி.மீ தொலைவிற்கு மூன்றாவது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் 26.1 கி.மீ தொலைவிற்கு நான்காம் வழித்தடமமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் 44.6 கி.மீ தொலைவிற்கு ஐந்தாம் வழித்தடமும் என மொத்தம் மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் நான்காவது வழித்தடமும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் ஐந்தாவது வழித்தடமும் சென்னை ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் இதுவரை சாத்தியப்படாத, சவாலான இரண்டடுக்கு மெட்ரோ பாலமாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் மேம்பாலம் 5 கிலோமீட்டர் உள்ளடக்கி உள்ளது. இதில் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

மேலும் படிக்க: சில்லென மாறிய சென்னை.. இனி தினமும் மழை இருக்கு.. வானிலை சொல்வது என்ன?

இதில் தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தடமும் 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழி தடமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைய உள்ள இப்பகுதிகள் மிகக் குறுகியதாக இருப்பதால் ராட்சத கிரேன்களை பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும், இதனால் லான்சிங் கர்டர் கிரேன்களை பயன்படுத்தியே பணிகள் நடைபெற்று வருகிறது. நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அமைய உள்ள டபுள் டக்கர் மெட்ரோ பாலத்திற்கு மொத்தம் 608 யு கார்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளது அதில் 64 கார்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதம் 230 காடர்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டபுள் டக்கர் பாலத்தின் பணிகள் 2026 தொடக்கத்தில் முழுவதுமாக நிறைவடைந்து 2026 ஜூன் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயிலில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நம்புயுள்ள நிலையில், 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவுக்கு வந்தால் இன்னும் பல லட்சம் மக்கள் பயணடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest News