5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tasmac: புது வகையான பீர்கள் அறிமுகம்.. டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த பீர் விற்பனை…!

Beer Sale : டாஸ்மாக் கடைகளில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விற்பனை அதிகரிப்பதை பார்த்திருப்போம். ஆனால், தற்போது கோடை வெயிலுக்கு பீர் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tasmac: புது வகையான பீர்கள் அறிமுகம்.. டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த பீர் விற்பனை…!
டாஸ்மாக்
intern
Tamil TV9 | Updated On: 24 May 2024 20:25 PM

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதம் முதலே அதிகரிக்க தொடங்கியது. வெயிலியின் தாக்கத்தை குறைக்க தமிழக இளைஞர்கள் தேர்வு என்பது முதல் தேர்வாக இருப்பது ‘பீர்’ தான் உள்ளது.  இளைஞர்களுக்கு ஏற்றார் போல், புதுவகையான பீர்கள் இந்த சம்மரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தான் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Also Read: புனே கார் விபத்து: சிறுவனுக்கு பீட்சா, பர்கர் வழங்கிய போலீஸ்.. அடுத்த சர்ச்சை

தமிழகத்தில் எந்த பண்டிகை நாட்களும் இல்லாத நாட்களில், அதுவும் மே மாதத்தில் குறிப்பாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது அதிர்ச்சியயையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தமிழகத்தில் பண்டிகை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும், மதுபானங்களின் விலை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.  ஆனால், மே மாதங்களில் அதுவும் குறிப்பாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 26.55 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக  கூறப்படுகிறது.  அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம், கடந்த மே மாதத்தில் 1 முதல் 19ஆம் தேதி வரை 23,66,856 பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பீர் விற்பனையில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ள நிலையில், அடுத்து சேலமும், திருப்பூர் மூன்றாம் இடத்திலும் திருவள்ளூர் நான்காம் இடத்திலும் உள்ளது.

Also Read: Covai: பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் பலி… கோவையில் ஏற்பட்ட சோகம்..!

பீர் விற்பனை அதிகரிப்பது தொடர்பாக,  டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி 24 பீர் பிராண்டுகள் விற்பனை நடைபெற்றது. இதில், 3 புது வகையான பீர் பிராண்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. அதில், 100 சதவீதம் கோதுமை பீர் அடங்கும். இது மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், புதிய வகை பீர் பிராண்டுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனையை பொறுத்தவரையில், மே மாதத்தில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பீர் பெட்டிகள் விற்பனை நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 லட்சம் வரை பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதைவிட 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறினர். அதேபோல், வெளிநாட்டு வகை மதுபான விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதேபோல், டாஸ்மாக் வருவாய் மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

Latest News