திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா? சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரபரப்பு விளக்கம்! - Tamil News | | TV9 Tamil

திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா? சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரபரப்பு விளக்கம்!

Updated On: 

27 Jun 2024 14:42 PM

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள் என்றும், பாலினம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களும் உடலில் எந்தவொரு உலோகத்தையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்துள்ளதாகவும் அது பாரபட்சமானது இல்லை என்றும் அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற பாலிசி எதுவும் இல்லை எனவும் வேலைக்கு தேர்வாகாத நபர்கள் இதுபோன்ற செய்திகளைப் பரப்பி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா? சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரபரப்பு விளக்கம்!

பெண்கள்

Follow Us On

திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா? இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் ஐபோன்களின் பெரும்பங்கினை தயாரித்து வழங்குகிறது. இந்த நிலையில், இந்நிறுவனம் சர்ச்கையில் சிக்கியுள்ளது. அதாவது, சென்னையில் செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தமிழக தொழிலாளர் துறையிடம் மத்திய அமைச்சகம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 1976ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தை மேற்கோள் காட்டி, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

திருமணமான பெண்களை வேலையிலிருந்து விலக்கும் ஃபாக்ஸ்கானின் நடவடிக்கை பற்றி தகவல் வெளியானதை அடுத்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக அமைச்சகம் கூறியது. உண்மை நிலை அறிக்கையை வழங்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனே இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

Also Read:  தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

ஃபாக்ஸ்கான் விளக்கம்: 

அதன்படி, ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள் என்றும், பாலினம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களும் உடலில் எந்தவொரு உலோகத்தையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்துள்ளதாகவும் அது பாரபட்சமானது இல்லை என்றும் அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற பாலிசி எதுவும் இல்லை எனவும் வேலைக்கு தேர்வாகாத நபர்கள் இதுபோன்ற செய்திகளைப் பரப்பி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தித்துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற தவறான செய்திள் அதை மட்டுப்படுத்துவது போல இருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தற்போது 70 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் உள்ளனர். சுமார் 45 ஆயிரம் பெண்கள் வரை வேலை செய்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் வேலை செய்யும் தொழிற்சாலை என்ற பெயரை இது பெற்றுள்ளது.  இந்து திருமணமான பெண்கள் தாலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவதற்கு பாகுபாடு காட்டப்படுவது தகவல் வெளியானது. இது பொய்யான தகவல்.

இதுபோன்ற தொழிற்சாலைகளில் உடலில் எந்தவொரு உலோகம் இருந்தாலும் அது பாதுகாப்பு சார்ந்த பிரச்னையை ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆணோ, பெண்ணோ, திருமணாவர்களாக இருந்தாலோ, திருமணமாகாதவர்களாக இருந்தாலோ, எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலோ அவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போது அனைத்து விதமான உலோகங்களையும் அகற்ற வேண்டும். பாதுகாப்பு காரணங்களாகவே இந்த விதி  நடைமுறையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Also Read: இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..!

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version