Erode: திருமணத்தை மீறிய உறவு.. குடியிருந்த வீட்டுக்கு தீவைத்த ஐபிஎஸ் அதிகாரி

தன்னுடைய பழக்கம் குறித்து மனைவியிடம் சொன்னதற்காக ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன் உதவி ஆய்வாளர் சுஜாதாவின் கணவரை தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன் மீது காவல்துறையில் புகார் அளிக்க, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில் அருண் ரங்கராஜனின் மனைவி இலக்கியா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.

Erode: திருமணத்தை மீறிய உறவு.. குடியிருந்த வீட்டுக்கு தீவைத்த ஐபிஎஸ் அதிகாரி

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Sep 2024 19:50 PM

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் குடும்ப தகராறில் தனது வீட்டுக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜன். இவர் 2012 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்தல் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் பணியாற்றிய சக ஐபிஎஸ் அதிகாரியான இலக்கியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்தாண்டு அருண் ரங்கராஜனுக்கு கர்நாடக மாநிலத்தில் பணியிடமாற்றம் கிடைத்தது. அங்குள்ள கலாபுர்கி  மாவட்டத்தில் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

Also Read: Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!

அப்போது அதேபகுதியில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுஜாதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக இருந்துள்ளது. இந்த விவகாரம் உதவி ஆய்வாளர் சுஜாதாவின் கணவருக்கு தெரிய வந்த நிலையில் அவர் உடனடியாக அருண் ரங்கராஜன் மனைவி இலக்கியாவிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இலக்கியா அருணிடம் நடந்தது பற்றி சண்டைப் போட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே தன்னுடைய பழக்கம் குறித்து மனைவியிடம் சொன்னதற்காக ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன் உதவி ஆய்வாளர் சுஜாதாவின் கணவரை தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன் மீது காவல்துறையில் புகார் அளிக்க, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில் அருண் ரங்கராஜனின் மனைவி இலக்கியா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.

Also Read: South Korea: அதிகாரிகள் அலட்சியம்.. 1000 பேர் உயிரிழப்பு.. 30 பேரை தூக்கில் ஏற்றிய கிம் ஜோங் உன்!

இந்த நிலையில் ஈரோடு கோபிசெட்டிபாளையத்துக்கு பெண் காவல் உதவி ஆய்வாளர் சுஜாதாவை அழைத்து வந்து அருண் ரங்கராஜன் குடும்பம் நடத்தியுள்ளார். ஆனால் அவருடன் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சுஜாதாவை அருண் ரங்கராஜன் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் உதவி ஆய்வாளர் சுஜாதா, அருண் ரங்கராஜன்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன் தனது வீட்டுக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரை மீட்க முற்பட்டபோது காவல் ஆய்வாளரை அருண் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?