Thirumavalan vs Vijay: ஒரே நிகழ்ச்சியில் திருமா – விஜய் ? எங்கே ? எப்போது? அரசியலில் நடக்கப்போகும் புது ட்விஸ்ட்.. ..
முதலில் திருச்சி அல்லது மதுரையில் தான் மாநாடு நடத்தப்படுவதாக திட்டம் இருந்தது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 27 ஆம் தேதி வி. சாலையில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட த.வெ.க கட்சியின் கொள்கை தலைவர் விஜய் எடுத்துரைத்தார்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய த.வெக மாநாட்டிற்கு பின் மற்றொரு விஷயம் தலைத்தூக்கியுள்ளது. அதாவது வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், த.வெ.க கட்சி தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து படிப்படியாக கட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆக்ஸ்ட் 22 ஆம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்போது கூட கட்சியின் கொள்கை என்ன என்பது பற்றி வெளியே வராமல் இருந்தது.
த.வெ.க மாநாட்டில் திருமாவிற்கு வலை வீசிய விஜய்:
இதனை தொடர்ந்து கட்சியின் முதல் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் திருச்சி அல்லது மதுரையில் தான் மாநாடு நடத்தப்படுவதாக திட்டம் இருந்தது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 27 ஆம் தேதி வி. சாலையில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட த.வெ.க கட்சியின் கொள்கை தலைவர் விஜய் எடுத்துரைத்தார்.
மேலும் படிக்க: சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!
முக்கியமாக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் சொல்லாத ஒரு விஷயத்தை விஜய் தெரிவித்தது மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியது. மேலும் இந்த மாநாட்டில் கட்சி கொடி குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.
த.வெ.க – வி.சி.க கூட்டணியா?
விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய அஜெண்டாவான ஆட்சியில் பங்கு என்பது குறித்து தவெக மாநாட்டில் பேசப்பட்டது. அதிலிருந்தே விசிக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தவெக உடன் கூட்டணி அமைக்கும் என பேச்சுக்கள் அடிப்பட்டது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருமாவளவன் அதனை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். மேலும், திமுக கூட்டணியில் தொடர்வது உறுதி எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் தவெக மாநாடு நடந்தது முதலே திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது விசிகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பெருந்தலைவர் அம்பேத்கர் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளதாகவும் அதனை டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புத்தகத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட அதனை தவெக தலைவர் விஜய் பெற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களே..! இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக?
கடந்த சில மாதங்களாக திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் விசிக தரப்பில் நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாட்டிற்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது. கூட்டணியில் அதிருப்தி இருப்பதால் விசிக, திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக உடன் கைக்கோர்க்கும் என பேசப்பட்டது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பியதுமே திருமாவளவன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனை தொடர்ந்து தற்போது தவெக மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அக்கட்சி தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால் திருமாவளவன் அதனை மறுத்து அரசியலில் ஆஃபர் என்பது கடைசி அஸ்திரமாக பயன்படுத்த வேண்டும், விஜய் அவசர அவசரமாக இதனை அறிவித்துள்ளார் என தெரிவித்தார். இந்த சர்ச்சைகளுக்கு இடையே தற்போது விஜய் மற்றும் திருமா ஒரே மேடையில், ஒரே நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளதாக வெளியான தகவல் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.