Kalaignar Coin: கலைஞர் 100 நாணயம்.. எங்கே கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? முழு விவரம்.. - Tamil News | kalaignar centenary coin how to get it where to get it know in detail | TV9 Tamil

Kalaignar Coin: கலைஞர் 100 நாணயம்.. எங்கே கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? முழு விவரம்..

Published: 

20 Aug 2024 11:52 AM

நூற்றாண்டு நிகழ்ச்சி ஓராண்டு காலம் வரை நடக்கும் என தெரிவித்திருந்த நிலையில், அவரது நினைவாக கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூலகம் என திமுக கட்சி தரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் இறுதி நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் கலைஞர் 100 நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

Kalaignar Coin: கலைஞர் 100 நாணயம்.. எங்கே கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? முழு விவரம்..

கலைஞர் 100 நாணயம்

Follow Us On

கலைஞர் நாணயம் எப்படி பெறுவது: கலைஞர் நாணயம்திமுகவின் முன்னாள் தலைவர் முறைந்த கலைஞர் கருணாநிதியின் 100 நாணயம் வெளியிடப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நூற்றாண்டு நிகழ்ச்சி ஓராண்டு காலம் வரை நடக்கும் என தெரிவித்திருந்த நிலையில், அவரது நினைவாக கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூலகம் என திமுக கட்சி தரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் இறுதி நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் கலைஞர் 100 நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதுவரை காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத், இந்திரா காதி, அம்பேத்கர், ராஜீவ்காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஜ்பாய், சர்தார் வல்லபாய் பட்டே,ல் எனப் பலருக்கும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி,ஆருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியாகி உள்ளது.

Also Read: ரூ.2 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை.. மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி உத்தரவு!

கலைஞர் நாணயம் தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். 100 ரூபாய் நாணயம் தான் ஆனால் அதன் மதிப்பு 10,000 ரூபாய். மதிப்பே கிடையாது. யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், திரு. காந்தி அவர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நான் 1 இலட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவர் 1 இலட்சம் என்ன, 10 இலட்சம் கூட கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

தலைவர் கலைஞர் அவர்களுடைய நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த எழுத்து தமிழ் வெல்லும். பெரும்பாலும் அவர் தமிழில் கையெழுத்து இடுகிறபோது பெரும்பாலும், தமிழ் வெல்லும், தமிழ் வெல்லும் என்று சொல்லித்தான் கையெழுத்திடுவார். இல்லையென்றால், அண்ணா வாழ்க, அண்ணா புகழ் ஓங்குக, பெரியார் வாழ்க என்று சொல்லிதான் கையெழுத்திடுவார். ஆகவே, தமிழ் வெல்லும் என்பது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

Also Read: நடிப்பு வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்.. மோலிவுட்டின் மறுபக்கம்.. ஷாக் கொடுத்த ரிப்போர்ட்

அதாவது கலைஞர் நாணயம் பலரும் வாங்க முன் வரும் நிலையில், அதனை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என சந்தேகம் இருந்து வருகிறது. இந்த கலைஞர் 100 நாணயம் சென்னை அறிவாலயத்தில் கிடைக்கும் என்றும், நாணயத்தை பெற்றுகொள்ள நினைப்பவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாணயம் ரூ. 10,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் 10,000 செலுத்தி எத்தனை நாணயங்கள் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version