5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராய மரணம் – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. கவலைக்கிடத்தில் பலர்..

Kallakurichi Incident: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 3 பேர் என தொடங்கிய நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது கள்ளக்குறிச்சியில் 27 பேரும், சேலம்த்தில் 15 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராய மரணம் – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. கவலைக்கிடத்தில் பலர்..
மாதிரி புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 21 Jun 2024 10:04 AM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 3 பேர் என தொடங்கிய நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கள்ளச்சாராய விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதான கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மகன் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் நேற்று முன்தினம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். தொடர்ந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Also Read:  கள்ளச்சாராய விவகாரம்.. த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..!

கடந்த 3 நாட்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 3 பேர் என ஆரம்பித்த உயிரிழப்பு தற்போது வரை 50 ஐ தொட்டுள்ளது. மேலும், இந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை மோசமாகி வருவதால், உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது கள்ளக்குறிச்சியில் 27 பேரும், சேலம்த்தில் 15 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றனர். மேலும் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினராக அதிமுக உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை அணிந்துள்ளனர். அதேபோல் இந்த சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளனர்.

Also Read: ஒருவரின் போன் நம்பரை பதியாமல் வாட்ஸ்அப் மெசேஜ் செய்வது எப்படி? இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!

Latest News