Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராய மரணம்.. 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் – எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி மரணம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்தோடு தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறியுள்ளது. அதனை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினர். மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளச்சாரயம் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது. பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்தோடு தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறியுள்ளது. அதனை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினர். மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதான கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மகன் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் நேற்று முன்தினம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். தொடர்ந்து, நேற்று காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, கண் எரிச்சல் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். அதன்படி தற்போது வரை சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அவருக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை. சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சையளித்து இருந்தால் பலரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
Also Read: உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வரம்பு.. பாட்னா உயர்நீதிமன்ம் அதிர்ச்சி தீர்ப்பு!
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஏற்கனவே புகாரளித்தும் கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்கவில்லை. விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறியுள்ளது. அதனை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினர். மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமின்றி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
Also Read: ஆனி மாத பெளர்ணமி: கேட்ட வரம் கிடைக்கும் சிவபெருமான் வழிபாடு..!