5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. 11 பேருக்கு 3 நாள் காவல்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான இந்த 11 நபர்களையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீராம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து சிபிசிஐடி போலீசாரின் விசாரணையை முடித்து வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் குற்றவாளிகள் 11 பேரையும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. 11 பேருக்கு 3 நாள் காவல்..!
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jul 2024 14:18 PM

கள்ளக்குறிசிச்சி கள்ளச்சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மாதேஷ், சிவக்குமார் உள்ளிட்ட 11 பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 65 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு விஷ சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் மற்றும் மெத்தனால் சப்ளை செய்த மாதேஷ் சிவகுமார் உள்ளிட்ட 21 பேரை இதுவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read: திங்கள்கிழமை கடவுள் வழிபாடு.. இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய விற்பனை மற்றும் தயாரிப்பை தடுக்க மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விஷ சாராய வியாபாரி கோவிந்தராஜ், விஜயா மற்றும் சக்திவேல், கண்ணன், கதிரவன், ஜோசப் ராஜ், சின்னதுரை மற்றும் ஆலை உரிமையாளர் பன்சிலால், கெளதம் மற்றும் மெத்தனால் சப்ளை செய்து வந்த மாதேஷ்,சிவக்குமார் ஆகிய 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான இந்த 11 நபர்களையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீராம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து சிபிசிஐடி போலீசாரின் விசாரணையை முடித்து வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் குற்றவாளிகள் 11 பேரையும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த 11 நபர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் மேலும் பல கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் மெத்தனால் சப்ளை செய்யும் நபர்கள் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் கைதாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 168 ஆண்டு கால வரலாறு.. தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.. சென்னைக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

Latest News