5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kallakurichi Illicit Liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் பதற்றம்!

கள்ளக்குறிச்சில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. கருணாபுரம் பகுதியில் இந்த சாராயத்தை பலரும் வாங்கி குடித்துள்ளனர். இதனை அடுத்து பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  தற்போது வரை 70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Kallakurichi Illicit Liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் பதற்றம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்த சம்பவம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2024 09:54 AM

கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயம் குடித்த 31 பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. கருணாபுரம் பகுதியில் இந்த சாராயத்தை பலரும் வாங்கி குடித்துள்ளனர். இதனை அடுத்து பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  தற்போது வரை 70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: சில்லென மாறிய சென்னை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

மருத்துவமனையில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதில் 18 பேர் ஆம்புலஸ்கள் மூலமா புதுச்சேரி மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 பேருக்கு அவரச சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்து இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை:

கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர சமய்சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர் காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதவிட்ட முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என்றார்.

Also Read: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ!

Latest News