Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராய விவகாரம்.. த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..! - Tamil News | | TV9 Tamil

Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராய விவகாரம்.. த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..!

Updated On: 

25 Jun 2024 09:36 AM

Kallakkurichi - Vijay Visit: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றனர். இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பெரியளவில் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக இன்று மக்களைச் சந்தித்துள்ளார்.

Kallakurichi Hooch Tragedy: கள்ளச்சாராய விவகாரம்.. த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..!

த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

Follow Us On

கள்ளச்சாராய மரணம் – விஜய் நேரில் ஆறுதல்: கள்ளச்சாராய அருந்திய பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றனர். இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பெரியளவில் கருத்து தெரிவிக்காமல் இருந்து விஜய்,  முதன்முறையாக இன்று மக்களைச் சந்தித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதான கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மகன் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் நேற்று முன்தினம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். தொடர்ந்து, நேற்று காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, கண் எரிச்சல் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். அதன்படி தற்போது வரை சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 10 லட்சம் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்ததோடு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

இந்த சூழலில் தான் த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். படத்தில் நடிக்க மாட்டேன் முழு நேர அரசியல் வாழ்க்கையில் ஈடுபட உள்ளதாக அறிவித்த பின் அரசியல் தொடர்பான எந்த விஷயத்திலும் பெரிதும் ஈடுபடவில்லை. தற்போது முதல்முறையாக மக்களை சந்தித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த விஜய், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Also Read: கிரிவலம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..! சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version