Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்.. பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் இவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 54 ஆக உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 57ஆக உயர்ந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 202ஆக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தைச் சேர்ந்த மணி கல்யாணசுந்தரம் (43), மாதவச்சேரியைச் சேர்ந்த கண்ணன் (55), வீராசாமி (40), பரமசிவம் (38) ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் இவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 54 ஆக உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 57ஆக உயர்ந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 202ஆக உயர்ந்துள்ளது. சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன் (42) இவர் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் அருந்து மயங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து, இவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சப்பிரமணியனை போலீசார் தேடி பார்த்தனர். நேற்று காலையில் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டல் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதேபோல, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தைச் சேர்ந்த மணி கல்யாணசுந்தரம் (43), மாதவச்சேரியைச் சேர்ந்த கண்ணன் (55), வீராசாமி (40), பரமசிவம் (38) ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயர்ந்துள்ளது.
Also Read: இந்திய இளைஞர்களுக்கு 10 ஆண்டு முன்பே வரும் மாரடைப்பு-வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!
11 பேர் கைது:
தற்போதைய நிலவரப்படி, 203 பேர் கள்ளச்சாராய குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 57 பேர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதவிர கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 97 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 148 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 20 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதவச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Also Read: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி.. மாணவர்கள் விடுதிகளுக்கு விலக்கு – மத்திய நிதியமைச்சர்..