Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு.. அதிகரிக்கும் உயிரிழப்பு - Tamil News | Kallakurichi spurious liquor consumption death live updates and latest update on hooch Tragedy death news in tamil | TV9 Tamil

Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு.. அதிகரிக்கும் உயிரிழப்பு

Kallakurichi liquor incident : இந்தியாவையே அதிரவைத்த சம்பவமாக மாறியுள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்புகள். மணிக்கு மணி உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. தற்போது வரை 70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.

Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு.. அதிகரிக்கும் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி நேரலை

Updated On: 

20 Jun 2024 23:11 PM

கள்ளச்சாராயம் உயிரிழப்பு : கள்ளக்குறிச்சில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. கருணாபுரம் பகுதியில் இந்த சாராயத்தை பலரும் வாங்கி குடித்துள்ளனர். இதனை அடுத்து பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  தற்போது வரை 70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Jun 2024 08:26 PM (IST)

    கள்ளச்சாராய விவகாரம்: சேலம் மருத்துவமனையில் 36 பேருக்கு தீவிர சிகிச்சை..

    கள்ளச்சாராய விவகாரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 46 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 36 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • 20 Jun 2024 07:18 PM (IST)

    கள்ளச்சாராய மரணம்: அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    கள்ளச்சாராய மரணம் மற்றும் போதைப்பொருள் விற்பனை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் வரும் திங்கட்கிழமை அனைத்து மாவட்டத்திலும் அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 20 Jun 2024 06:52 PM (IST)

    கள்ளச்சாராய விவகாரம்: த.வெ.க தலைவர் விஜய் நேரில் ஆறுதல்..!

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

  • 20 Jun 2024 06:26 PM (IST)

    கள்ளச்சாராய மரணம்: உயிரிழந்தோரின் உடல்களை தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது..

    கள்ளச்சாராயம் அருந்தி 39 பேர் உயிரிழந்த நிலையில் முதற்கட்டமாக 21 பேரை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்களை தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.

  • 20 Jun 2024 05:57 PM (IST)

    கள்ளச்சாராய மரணம்: த.வெ.க தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்..

    கள்ளச்சாராய மரணம் தொடர்பான சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கள்ளக்குறிச்சி புறப்பட்டார்.

  • 20 Jun 2024 05:26 PM (IST)

    கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் – ஜி.வி பிரகாஷ்..

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என தெரிவித்துள்ளார்

  • 20 Jun 2024 04:58 PM (IST)

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: சசிகலா நேரில் சென்று ஆறுதல்..

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திந்து ஆறுதல் தெரிவித்தார்.

  • 20 Jun 2024 04:31 PM (IST)

    கள்ளச்சாராய விவகாரம்: ஜிப்மர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் 16 பேர்..!

    கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 19 பேர் நேற்று ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ஜிப்மர் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 20 Jun 2024 03:59 PM (IST)

    கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு கண்பார்வை பறிபோன செய்தி தவறானது – மருத்துவமனை விளக்கம்..

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 44 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேருக்கு கண்பார்வை பறிபோனதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 20 Jun 2024 03:34 PM (IST)

    கள்ளச்சாராய உயிரிழப்பு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்..

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய அருந்தி உயிரிழந்தவர்களில் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடுக்கான காசோலையும் வழங்கினார்.

  • 20 Jun 2024 03:15 PM (IST)

    மாவட்ட ஆட்சியர் பொய் கூறினார் – ஈபிஎஸ்

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினார் – ஈபிஎஸ்

  • 20 Jun 2024 03:14 PM (IST)

    கல்வி செலவை அதிமுக ஏற்கும் – எடப்பாடி பழனிசாமி

    3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் – எடப்பாடி பழனிசாமி

  • 20 Jun 2024 02:56 PM (IST)

    ஒரே இடத்தில தகனம்

    கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • 20 Jun 2024 02:06 PM (IST)

    மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம் – பா.ரஞ்சித்

  • 20 Jun 2024 02:05 PM (IST)

    அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணம் – பா.ரஞ்சித்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது – பா.ரஞ்சித்

  • 20 Jun 2024 01:44 PM (IST)

    கள்ளக்குறிச்சி உயிரிழப்பு 38 ஆக உயர்வு

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்

  • 20 Jun 2024 01:14 PM (IST)

    தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை – அமைச்சர் எ.வ.வேலு

    கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துள்ளது. அதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. மெத்தனமாக செயல்பட்ட போலீசார் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் – அமைச்சர் எ.வ.வேலு

  • 20 Jun 2024 12:34 PM (IST)

    CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – உதயநிதி

    சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார், மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – உதயநிதி

  • 20 Jun 2024 12:34 PM (IST)

    மெத்தனால் வழங்கியது யார்?

    தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  • 20 Jun 2024 12:04 PM (IST)

    கள்ளக்குறிச்சி வந்த எடப்பாடி பழனிசாமி

    கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி வந்தடைந்தார்

  • 20 Jun 2024 12:02 PM (IST)

    தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

  • 20 Jun 2024 10:58 AM (IST)

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்… பாஜக நாளை மறுநாள் போராட்டம்

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.

  • 20 Jun 2024 10:48 AM (IST)

    பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு

    இன்று ட்டப்பேரவை தொடங்கப்பட்ட நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் நாளை காலை 10 மணிக்கு பேரவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 20 Jun 2024 10:46 AM (IST)

    கள்ளச்சாராயம் விவகாரம் – முதலமைச்சர் அவசர ஆலோசனை

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தலைமை செயலர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

  • 20 Jun 2024 10:43 AM (IST)

    கள்ளச்சாராயம் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம். இது அரசின் கையாளாகதத்தனம் என விமர்சனம்

  • 20 Jun 2024 10:00 AM (IST)

    கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை அதிகரிப்பு

    கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 35ஆக  அதிகரிப்பு

  • 20 Jun 2024 09:35 AM (IST)

    நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் – விஜய்

  • 20 Jun 2024 09:31 AM (IST)

    அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது – விஜய்

    கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது – விஜய்

  • 20 Jun 2024 09:31 AM (IST)

    மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது – விஜய்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன – விஜய்

  • 20 Jun 2024 09:13 AM (IST)

    பலி எண்ணிக்கை 33ஆக அதிகரிப்பு

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக அதிகரிப்பு

  • 20 Jun 2024 08:57 AM (IST)

    இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்

    இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்

  • 20 Jun 2024 08:57 AM (IST)

    அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் – முதல்வர்

    “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் முக ஸ்டாலின்

  • 20 Jun 2024 08:54 AM (IST)

    கூண்டோடு பணிநீக்கம்

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர சமய்சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர் காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • 20 Jun 2024 08:53 AM (IST)

    மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம்

    கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • 20 Jun 2024 08:53 AM (IST)

    தற்போது வரை 31 பேர் உயிரிழப்பு

    மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 20 Jun 2024 08:52 AM (IST)

    70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை

    பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது வரை 70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

  • 20 Jun 2024 08:52 AM (IST)

    கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?

    கள்ளக்குறிச்சில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. கருணாபுரம் பகுதியில் இந்த சாராயத்தை பலரும் வாங்கி குடித்துள்ளனர். இதனை அடுத்து பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!