5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kasthuri Shankar: மன்னிச்சுகோங்க.. தெலுங்கு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி!

Kasthuri Shankar Controversial Speech: என்னுடைய தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது என்பது எப்போதும் என்னுடைய நோக்கமாக இருந்தது இல்லை. கவன குறைவாக பேசிய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அனைவரின் நலன் கருதி நவம்பர் 3 ஆம் தேதி அன்று நான் பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன். அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை கவனத்தை திசை திருப்பியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Kasthuri Shankar: மன்னிச்சுகோங்க.. தெலுங்கு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Nov 2024 18:39 PM

நடிகை கஸ்தூரி: தெலுங்கு மக்கள் குறித்து தான் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில் நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்தது. எனக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில் அது என்னை மிகவும் கடினமாக்கி விட்டது. எவ்வாறாயினும் இன்று எனது மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதனை தாண்டி பல பகுதிகளிலும் வாழும் ஒட்டுமொத்த தெலுங்கு மக்களுக்கும் நான் சொன்ன வார்த்தைகளால் ஏற்பட்ட தாக்கங்களை பொறுமையாக விளக்கிக் கூறினார். நான் எப்போதும் என் பாரத மாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதியாக உள்ளேன். எப்போதும் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக திகழ்கிறேன். எனக்கு தெலுங்கு மக்களுடன் எப்போதும் சிறப்பான தொடர்பு உள்ளது என்பது அதிர்ஷ்டமான விஷயமாகும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

மேலும், “நான் நாயக்க மன்னர்கள், கட்டபொம்மன் நாயக்கர் பற்றி படித்தும்,  தியாகராஜ கீர்த்தனைகள் பாடி புகழ்பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள். தெலுங்கில் எனது திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கென பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை வழங்கியுள்ளனர். நான் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறிப்பிட்ட சில நபர்களுக்கு சூழல்  சார்ந்து சொல்லப்பட்டவையே தவிர பெரும்பான்மையான தெலுங்கு சமுதாயத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது என்பது எப்போதும் என்னுடைய நோக்கமாக இருந்தது இல்லை. கவன குறைவாக பேசிய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அனைவரின் நலன் கருதி நவம்பர் 3 ஆம் தேதி அன்று நான் பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன். அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்காக போராட திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஜெய்ஹிந்த்” என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.  இதன்மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: Tamilnadu Powercut: தமிழகத்தில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

நடந்தது என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து எழுந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிராமண சமூகத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட அரசியல் சார்ந்த பிரமுகர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கையாக உள்ளது எனவும், பொய்யான காரணங்களை கூறி சமுதாய மக்களைப் பிளவு படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டினார். யார் வந்தேறி என ஆய்வு செய்தால் திமுகவின் ஓட்டு பிரிந்து விடும் எனவும் கஸ்தூரி கடுமையாக விமர்சித்தார்.

அப்போது 300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் என சொல்லும்போது எப்போதோ இருந்து வசித்து வரும் பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? என கேட்டார். அதனால்தான் இங்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இருக்கிறது. ஏன் தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என இல்லை என கேள்வியெழுப்பினார். கஸ்தூரியின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில் நேற்று செய்தியாளர்களை அழைத்து தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தார். அப்போது நான் எதையும் தவறாக சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னேன். அது தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பப்பட்டதாக தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்த நிலையில் இன்று அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்

Latest News