5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெளுக்கும் கனமழை.. கொடைக்கானல், குன்னூர் போகாதீங்க.. வெதர்மேன் முக்கிய தகவல்!

Tamilnadu Weatherman : சென்னையில் கனமழை பெய்யும் எனவும் அடுத்த 3 நாட்களுக்கு குன்னூர் மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், தென் மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

வெளுக்கும் கனமழை.. கொடைக்கானல், குன்னூர் போகாதீங்க.. வெதர்மேன் முக்கிய தகவல்!
மழை (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Dec 2024 09:07 AM

சென்னையில் கனமழை பெய்யும் எனவும் அடுத்த 3 நாட்களுக்கு குன்னூர் மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்ந காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இது வட இலங்கை – பால்க் விரிகுடா / மன்னார் வளைகுடா – தெற்கு தமிழகம்- கேரளா வழியாக நகரும். இதனால் தமிழகத்தின் உள் பகுதிகள், மேற்கு தமிழகம் அனைத்திலும் கனமழை பெய்யும். சென்னை பொறுத்தவரை இன்று பகலில் இருந்து மழை தொடங்கும். மாலை அல்லது இரவிலும் மழை தீவிரடையும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும் கனமழை பெய்யும்” என்றார்.

அடுத்த 3 நாட்களுக்கு பிச்சு உதறபோகு மழை

மேலும், ”சென்னையில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும். புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாலை, கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யும். டெல்டாவை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்.

கொடைக்கானல் மற்றும் குன்னூர் பெல்ட்களில் அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு மிக கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலை நோக்கி நகரும்போது கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டஙகளில் கனமழை பெய்யும்.

வட உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் ஒரு நாள் நல்ல மழை பொழிவு இருக்கும். மதுரை – தேனி, தென்காசி விருதுநகர் ன்ற பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். தூத்துக்குடி நெல்லை, குமரி தென்பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொடைக்கானல், குன்னூருக்கு அலர்ட்


தாழ்வான பகுதி கடக்கும் பாதையை பொறுத்து மழையின் அளவு மாறும்போது. தென் தமிழகத்தை ஒட்டி கடந்தால் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சூறாவளி காற்றுக்கு வாய்ப்பிள்ளை. கொடை மற்றும் குன்னூரில் டெல்டா மற்றும் மேற்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அடுத்த 3 நாட்களுக்கு கொடைக்கானல், குன்னூரில் கனமழை பெய்யும் எனவும் இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.  மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று தமிழகத்தில் கனமழை வெளுக்கும் என்றும் கூறியுள்ளது.

அதாவது, இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Latest News