கொடைக்கானலில் துவங்கியது 61-வது மலர் கண்காட்சி… நுழைவு கட்டணம் உயர்வு!
Kodaikanal Flower Show: சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு மலர் உருவங்கள் அமைக்கப்படுகின்றன. வான் கோழி, மரம், மலர் இதழ்கள், மலர் வீடு, மயில், சேவல், நெருப்புக் கோழி ஆகிய உருவங்கள் கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 6 வண்ணங்களில் கேர்னேசன் மலர்களைக் கொண்டு இந்த உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
சர்வதேச சுற்றுலா தலமான திண்டுகல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று மே 17-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்க விழாவில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் பங்கேற்றனர்.
இன்று தொடங்கி மே 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளூர் கலைஞர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார அணி வகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு மலர் உருவங்கள் அமைக்கப்படுகின்றன. வான் கோழி, மரம், மலர் இதழ்கள், மலர் வீடு, மயில், சேவல், நெருப்புக் கோழி ஆகிய உருவங்கள் கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 6 வண்ணங்களில் கேர்னேசன் மலர்களைக் கொண்டு இந்த உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
Also read… செங்கல்பட்டு அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து… 4 பேர் உயிரிழப்பு!
இந்நிலையில், பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நடவு செய்யப்பட்டுள்ள சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியா உட்பட 15 வகையான 2.50 லட்சம் மலர்ச் செடிகள் தற்போது பல வண்ணங்களில் பூத்துக் குலங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இன்று முதல் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 30ல் இருந்து ரூ. 75 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ. 15ல் இருந்து ரூ. 35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.