5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“கூட்டமே இல்ல” கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு வராத சுற்றுலாவாசிகள்… காரணம் இதுதானா?

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல பொதுமக்கள் இ-பாஸை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம். இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் மே 16-ம் தேதி வரை கொடைக்கானலுக்கு 23,469 வாகனங்களில் 1.59 லட்சம் பேர் வந்துள்ளனர். மே 16ஆம் தேதி மட்டும் 2,024 வாகனங்களில் 14,176 பேரும், மே 15ஆம் தேதி 2,174 வாகனங்களில் 14,483 பேரும் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கூட்டமே இல்ல” கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு வராத சுற்றுலாவாசிகள்… காரணம் இதுதானா?
கொடைக்கானல் மலர் கண்காட்சி
umabarkavi-k
Umabarkavi K | Published: 18 May 2024 15:28 PM

கொடைக்கானால் மலர் கண்காட்சி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 61வது மலர் கண்காட்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. மலர் கண்காட்சியை வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலர் ஆபுர்வா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொடைக்கானல் மலர் கண்காட்சி மே 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மலர் கண்காட்சி நடைபெறும் 10 நாட்களுககு மட்டும் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 75 ரூபாயும், சிறியவர்களுக்கு அதாவது 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.35 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி விழா நடைபெறும் நாட்களில் காலை 8 மணிக்கு பூங்கா திறந்து மாலை 7 மணி வரை திறந்திருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு மலர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேவல், வான்கோழி, மயில், மலர் வீடு, மலர் இதழ் ஆகிய உருவாங்கள் கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக 360 டனல் என்ற ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்கான புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கமானது.

Also Read : ”பாஜகவின் பிளவுவாதக் கனவு பலிக்காது” முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு வராத சுற்றுலாவாசிகள்

ஆனால், இந்தாண்டு குறைவான பார்வையாளர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மழை காரணமாகவும், இ-பாஸ் நெறிமுறைகள் காரணமாகவும் பார்வையாளர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறுப்படுகிறது. குறிப்பாக, இ-பாஸ் காரணமாக பார்வையாளர்களின் கூட்டம் குறைந்திருக்கிறது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல பொதுமக்கள் இ-பாஸை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம். மே 7ஆம் தேதி பிறகு கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இருப்பினும், மலர் கண்காட்சி தொடங்கி ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில், வரும் நாட்களில் அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் மே 16-ம் தேதி வரை கொடைக்கானலுக்கு 23,469 வாகனங்களில் 1.59 லட்சம் பேர் வந்துள்ளனர். மே 16ஆம் தேதி மட்டும் 2,024 வாகனங்களில் 14,176 பேரும், மே 15ஆம் தேதி 2,174 வாகனங்களில் 14,483 பேரும் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : Tamil Nadu Weather : 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா?

Latest News