Kumbakonam School fire : 94 குழந்தைகள் உயிரிழப்பு… கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து நினைவு நாள்.. அன்று நடந்தது என்ன?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 20வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இன்றைய நாளில் தீயின் கோர தாண்டவத்துக்கு குழந்தைகளை பறிக்கொடுத்த பெற்றோர்கள் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகையே உலுக்கி இந்த சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்ற வரை நீங்கா வடுவாகவும் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டை உலுக்கிய கும்பகோணம் விபத்து: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 20வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இன்றைய நாளில் தீயின் கோர தாண்டவத்துக்கு குழந்தைகளை பறிக்கொடுத்த பெற்றோர்கள் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகையே உலுக்கி இந்த சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்ற வரை நீங்கா வடுவாகவும் இருந்து வருகிறது. 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி காலைப் பொழுதில் கும்பகோணத்திற்கு ஒரு கொடூர நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே கட்டிடத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன.
2004 ஆண்டு ஆண்டில் இரண்டு பள்ளிகளிலும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தன. இந்த பள்ளி வளாகம் குடியிருப்பு பகுதியில் இருந்ததால் மிகுந்த இட நெருக்கடி உள்ள இடமாக அது இருந்திருக்கிறது. இந்த நிலையில், ஜூலை 16ஆம் தேதி அதாவது விபத்து நடந்த நாள் அன்று வழக்கம் போல் பள்ளிகள் இயக்கிக் கொண்டிருந்தது. அன்று ஆடி வெள்ளி என்பதால் பள்ளிக்கு அருகில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
Also Read: மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி வெட்டிக்கொலை.. அமைச்சர் வீட்டருகே நடந்த சம்பவம்.!
இதனை அறிந்த பள்ளி ஆசியர்கள் சிலர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என்று முடிவு எடுத்தனர். அந்த ஆசிரியர்கள் அனைவரும் மழலையர் பள்ளி ஆசிரியர்கள். இதனை அடுத்து, கோயிலுக்கு புறப்பட்ட ஆசிரியர்கள், குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக வகுப்பறையில் கதவுகளை நன்றாக பூட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
20 ஆண்டுகள் கடந்தும் நீகா துயரம்:
ஆசிரியர்கள் வெளியே சென்றவுடன் குழந்தைகள் வகுப்பறையில் விளையாட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மாடியில் சமையல் அறை ஒன்று இயங்கி வந்திருக்கிறது. அங்கு சமையல் வேலையில் இருந்த வசந்தி என்பவர் அருகில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் சமையல் அறையில் தீ பற்றி எரிந்தது. சமையல் வேலையில் இருந்த வசந்தி அந்த நேரத்தில் அங்கு இல்லாததால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தீ எல்லா பக்கங்களிலும் பரவி மேல் மாடியில் பூட்டப்பட்ட வகுப்பறை வரை பற்றி எரிந்தது. தீ ஏரிவதை பார்த்த மாணவிகள் அலறியடித்து ஓடி முயற்சித்திருக்கின்றனர். ஆனால், அதற்கு தீ மளமளவென வகுப்பறை முழுவதும் பற்றியது. இருப்பினும், மாணவிகள் வெளிவந்தனர்.
ஆனால், பள்ளி கட்டிடத்தின் குறுகிய மாடிப்படிகளில் இறங்கி வர முடியாமல் நெரிசலில் சிக்கினர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பள்ளியில் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் குழந்தைகளை மீட்டு கொண்டு வந்தனர். காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், தஞ்சை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த நேரத்தில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, பூட்டிய வகுப்பறைக்குள் இருந்த குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இவரது பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே அலறி துடித்தனர். இந்த விபத்தில் 94 குழந்தைகளின் உயிர் பறிப்போது. ஆயிரம் அசைகளுடனும், கனவுகளுடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்வு நடந்தது நாட்டையே பெரும் துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது.
Also Read: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!