ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 31 ஆம் தேதி வரை காவல்..
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி புகார் அளித்தார். இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, கேரளாவில் தனிப்படை கைது செய்தது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வருகின்ற 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆல் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதியப்பட்ட வழக்கில் கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12 ஆம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
மேலும் படிக்க: ஆதார் முதல் ரேஷன் அட்டை வரை.. கடைசி தேதி இதுதான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி புகார் அளித்தார். இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, கேரளாவில் தனிப்படை கைது செய்தது.
இந்நிலையில் வாங்கல் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் படிக்க: ஹர்திக் முதல் ஷமி வரை.. விவாகரத்து பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்..!