5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருவண்ணாமலையில் மண் சரிவு… வீட்டுக்குள் விழுந்த பாறைகள்.. 7 பேரின் நிலை என்ன?

Tiruvannamalai Landslide: திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கோயில் பின்புறம் உள்ள தீப மலையின் அடிவாரப் பகுதியில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண் சரிவு… வீட்டுக்குள் விழுந்த பாறைகள்.. 7 பேரின் நிலை என்ன?
கோப்புப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Dec 2024 23:04 PM

திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும், இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கோயில் பின்புறம் உள்ள தீப மலையின் அடிவாரப் பகுதியில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள மலை அடிவாரப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் பாறைகள் உருண்டு விழுந்துள்ளது. இதில் மலை அடிவாரப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் 7 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில்  மண் சரிவு

இதனால் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  இதனால், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மழையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஃபெங்கல் புயல் நேற்று இரவே கரையை கடந்த நிலையில்,  தற்போது வரை மழை பெய்து வருகிறது.

தற்போது வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலையில் நேற்று மதியம் முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால்   திருவண்ணாமலை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

Also Read : அதிகாலையிலேயே அதிர்ச்சி.. வாக்கிங் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை.. அவினாசியில் ஷாக்!

7 பேரின் நிலை என்ன?

போளுர் சாலை, வேலுர் சாலை, சின்னக்கடை தெரு, திருவண்ணாமலை கோயில் சாலை உள்ளிட்ட பிரதாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையில் இருந்து வெள்ள நீர் வழிந்தோடுகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் அவதிக்கப்படுகின்றனர். பல நூறு வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தொடர் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும், இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்குமார் என்பவரின் வீட்டில் தான் பாறை சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் கவுதம், இனியா மற்றும் ராஜ்குமாரின் உறவினர்களின் மகன், மகள்கள் தேவிகா, வினோதினி, மற்றொரு பெண் என மொத்தம் 7 பேர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Also Read : கனமழை எதிரொலி.. 9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “மண் அரிப்பு காரணமாக பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதில் முற்றிலுமாக ஒரு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அந்த வீட்டில் குழந்தைகள் உட்பட 7 பேர் உள்ளனர். தற்போது இவர்களை தேடி வருகிறோம். இவர்கள் இடிபாடுகளில சிக்கியுள்ளார்களா அல்லது வெளியூரில் உள்ளார்களா என்பதை விசாரித்து வருகிறோம். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பெரிய பாறைகளை அகற்றினால் தான் மீட்பு பணிகள் வேகமாக நடைபெறும்” என்றார்.

Latest News