5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Omni Bus Theft: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் அசால்ட்டாக திருடிய இளைஞர்!

அதிக கட்டணம், தரக்குறைவான மரியாதை உள்ளிட்ட பல விஷயங்கல்ஆம்னி பேருந்தில் செல்வதில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் தற்போதைய திருட்டு சம்பவம் அதன் ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. என்னதான் உடமைகளுக்கு பயணிகளுக்கு பொறுப்பு என சொல்லப்பட்டாலும், இதுபோன்ற இடங்களில் நிறுத்தும்போது தகுந்த பாதுகாப்பு இருக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Omni Bus Theft: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் அசால்ட்டாக திருடிய இளைஞர்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 20 Aug 2024 17:57 PM

ஆம்னி பேருந்தில் திருட்டு: இந்தியாவைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் சேவை என்பது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆம்னி பேருந்துகளில் சாதாரண இருக்கை மற்றும் படுக்கை வசதி, முற்றிலும் குளிரூட்டப்பட்ட இருக்கை மற்றும் படுக்கை வசதி என பல வகைகளிலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் புறப்படும் பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உணவு மற்றும் கழிவறை வசதிக்காக சாலையோர உணவங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். இது பேருந்து செல்லும் தூரத்தைப் பொறுத்து குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு ஒருமுறை நிறுத்தப்படும். இப்படி நிறுத்தப்படும் ஆம்னி பேருந்து ஒன்றில் நடைபெற்ற திருட்டு சம்பவம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிங்க: Hema Committee Report : நிர்வாண காட்சிகள்.. இரவு நேர தொந்தரவு.. மலையாள சினிமாவை புரட்டிப்போட்ட அறிக்கை.. ஷாக்கில் திரையுலகம்!

சம்பந்தப்பட்ட அந்த பேருந்து கடந்த 11 ஆம் தேதி பெங்களூரில் இருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. முழுக்க முழுக்க படுக்கை வசதி கொண்ட அந்த  ஆம்னி பேருந்து நடுவே உணவகம் ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது அதில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் இறங்கி கழிவறைக்கும், அருகில் இருந்த உணவகத்தில் டீ குடிக்கவும் இறங்கியுள்ளனர். அந்த சமயத்தின் போது அந்த பேருந்துக்குள் சுமார் 30 வயதுமிக்க  இளைஞர் ஒருவர் ஏறினார். உள்ளே சென்ற அவர் கடைசி வரை சென்று விட்டு ஒவ்வொரு இடமாக நோட்டமிட்டபடி வந்தார்.  அதில் எந்த பயணிகள் தங்கள் படுக்கையில் இல்லையோ அதில் ஒரு படுக்கையில் இருந்த லேப்டாப்பை திருடியுள்ளார்.

இதையும் படிங்க: Umanath IAS: ஸ்டாலினின் தனிச்செயலாளர்.. திமுக ஆட்சியில் அதிக கவனம் பெறும் உமாநாத் ஐஏஎஸ்!

இதன்பின்னர் பயணிகள் பேருந்தில் ஏறியதும் லேப்டாப் மற்றும் பேக் ஒன்று காணாமல் போன தகவலை பாதிக்கப்பட்ட பயணி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த நிலையில் அதில் இளைஞர் ஒருவர் பேக்குகளை தூக்கிச் சென்றது பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிக கட்டணம், தரக்குறைவான மரியாதை உள்ளிட்ட பல விஷயங்கல்ஆம்னி பேருந்தில் செல்வதில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் தற்போதைய திருட்டு சம்பவம் அதன் ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. என்னதான் உடமைகளுக்கு பயணிகளுக்கு பொறுப்பு என சொல்லப்பட்டாலும், இதுபோன்ற இடங்களில் நிறுத்தும்போது தகுந்த பாதுகாப்பு இருக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News