கோயில் விழாவில் திடீரென சாய்ந்த ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய மக்கள்.. அடுத்து நடந்தது என்ன?

Aadi Perukku | தமிழகம் முழுவதும் நேற்று ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடி பெருக்கு திருவிழா ஆடி 18 ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் நிகழ்வை கொண்டாடும் விதமாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் வைத்து, பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

கோயில் விழாவில் திடீரென சாய்ந்த ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய மக்கள்.. அடுத்து நடந்தது என்ன?

திடீரென சாய்ந்த ராட்டினம்

Published: 

04 Aug 2024 19:45 PM

பழுதாகி நின்ற ராட்டினம் : தமிழகம் முழுவதும் நேற்று ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடி பெருக்கு திருவிழா, ஆடி 18 ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் நிகழ்வை கொண்டாடும் விதமாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் வைத்து, பூஜை செய்து வழிபாடு செய்தனர். ஏராளமான ஊர்களில் காவேரி நீரை வரவேற்கும் விதமாக, ஆற்றங்கரையிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இந்நிலையில் திருப்பத்தூரில் உள்ள முருகன் கோயிலில் ஆடி பெருக்கு விழாவின் போது, ராட்டினம் பழுதாகி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி பெருக்கு திருவிழா

திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை பகுதியில் புகழ்பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி, ஆடி பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், நேற்று அடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான மக்கள் முருகன் கோயிலில் குவிந்தனர். அப்போது பக்தர்கள் தேர் இழுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திடீரென சரிந்து விழுந்த ராட்சத ராட்டினம் – அலறி துடித்த பொதுமக்கள்

முருகன் கோயிலில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான மக்கள் வருகை புரிந்துள்ளனர். அப்போது பல பொதுமக்கள் அங்குள்ள ராட்சத ராட்டினத்தில் ஏரி பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர். வெகு நேரம் ஆகியும் பொதுமக்கள் ராட்டினத்தில் பொழுதை கழித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டு சாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி துடித்துள்ளனர். உடனடியாக ராட்டின ஆப்ரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் உதவியுடன் ராட்டினத்தில் சிக்கொண்டிருந்த பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : Indian Army: வயநாடு சம்பவம்.. சிறுவன் எழுதிய கடிதத்தால் கண்கலங்கிய இந்திய ராணுவம்!

உரிய அனுமதியின்றி அமைக்கட்ட ராட்சத ராட்டினங்கள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு

இந்நிலையில் திருவிழாவில் உரிய அனுமதியின்றி ராட்டினங்கள் அமைக்கப்பட்டதாகவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ராட்டினத்தில் 2 பேர் அமர வேண்டிய இடத்தில் 4 பேர் அமர வைக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எங்கெங்கு தெரியுமா?

பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

கோயில் விழாவில் ராட்சத ராட்டினம் சாய்ந்த விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?