அவதூறு வழக்கில் நேரில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி.. 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு..

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டார். அப்போது அவரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்

அவதூறு வழக்கில் நேரில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி.. 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

30 Sep 2024 17:23 PM

நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக,எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டார். அப்போது அவரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

எடப்பாடியின் இந்த பேச்சுக்கு, கடுப்பான தயாநிதி மாறன், உடனடியாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மத்திய சென்னை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்துக்கும் மேலான தொகையை எனது தொகுதியின் மேம்பாட்டுக்காக செலவழித்துள்ளேன். தொகுதியில் செய்யப்பட்ட பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன்” என கூறியிருந்தார்.

மேலும் படிக்க: பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

மேலும், இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்த தமிழிசை சௌந்தராஜன்.. தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என அறிவுரை..

சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் ஆஜரானார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!