5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிறை டூ அபராதம்.. கள்ளச்சாராயம் விற்றால் இனி அவ்வளவுதான்… அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தையும் கிளப்பியது. இதற்கிடையில், ஜூன் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்குத் திருத்த சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சிறை டூ அபராதம்.. கள்ளச்சாராயம் விற்றால் இனி அவ்வளவுதான்… அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்
முதல்வர் ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Jul 2024 19:44 PM

 மதுவிலக்கு திருத்த சட்டம் அமல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தையும் கிளப்பியது. இதற்கிடையில், ஜூன் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்குத் திருத்த சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இன்று தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கும் கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிக்கப்படுகிறது.

Also Read: மருத்துவமனையில் சிகிச்சை… அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை எப்படி இருக்கு?

தண்டனை விவரம்:

  • கள்ளச்சாராயத்தை குப்பில் அடைத்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக மூன்று முதல் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
  • ஐம்பது லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரையிலான சட்டவிரோத மதுபான ஏற்றுமதி, இறக்குமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
  • சட்டவிரோத மதுபானம் அருந்துதல், வாங்குதல், குற்றங்கள் புரிவதற்கு பணம் செலவழித்தல் குற்றங்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறையும், ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படும் சட்டவிரோதமான மதுபான தொடர்புடைய குற்றங்களுக்கு ஆயுட்காலத்திற்கு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபான தொடர்புடைய குற்றங்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்கு புதிய பிரிவாக அந்தக் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இடம் சீல் வைக்கப்படும்
  • மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்திற்கு இரண்டு முதல் 5 ஆண்டு வரை சிறையும், ரூ.1 முதல் 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • மேலும், ஏற்கனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும்போது அந்த நபரின் சிறைவாசம் முடிநத் பின்பு, அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியில் இருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு ஆலவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!

 

Latest News