5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

” ஜூன் 4ல் வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள்” அண்ணாமலை பேச்சு!

"3வது முறையாக இன்னும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே, வெற்றியைக் கொண்டாட தயாராகுகள். இந்த முறை தென் இந்தியாவில் மட்டும் புதிய துவக்கமாக இருக்கும். தென்னிந்தியா, வட இந்தியா என்ற பேச்சு ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இருக்காது. கேரளா குறிப்பிட தகுந்த வெற்றி, தெலுங்கனாவில் 10 இடங்களில் பாஜகவின் வெற்றி உறுதி. கர்நாடகா உள்ள 28 இடமும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் பாஜக தான்" என்றார் அண்ணாமலை.

” ஜூன் 4ல் வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள்” அண்ணாமலை பேச்சு!
அண்ணாமலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2024 14:28 PM

18வது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஆறு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த வாக்குள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை முதல் கட்டத்திலேயே தேர்தல் முடிந்தது. திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக முதல்முறையாக தனித்து களம் காண்கிறது. அதாவது, பாஜக தனது தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது பூத் ஏஜெண்ட்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Also Read: வைகோவிற்கு சென்னையில் சிகிச்சை… என்னாச்சு? துரை வைகோ பகிர்ந்த தகவல்!

“வெற்றியைக் கொண்டாட தயாராகுகள்”

இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “3வது முறையாக இன்னும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 3வது முறையாக பாஜக ஆட்சி வர வேண்டும் என்பது  காலத்தின் கட்டாயம். பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே, வெற்றியைக் கொண்டாட தயாராகுகள். இந்த முறை தென் இந்தியாவில் மட்டும் புதிய துவக்கமாக இருக்கும். தென்னிந்தியா, வட இந்தியா என்ற பேச்சு ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இருக்காது. கேரளா குறிப்பிட தகுந்த வெற்றி, தெலுங்கனாவில் 10 இடங்களில் பாஜகவின் வெற்றி உறுதி.
கர்நாடகா உள்ள 28 இடமும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் பாஜக தான். மோடி என்கிற மனிதன் மீது தனி நம்பிக்கை உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது 2 சாதிகள் அல்லது இந்து, முஸ்லீம் போன்ற 2 மதங்களுக்கு இடையேதான் நடக்கும். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கும், நாட்டிற்கும் ஆதரவான சக்திகளுக்கும் இடையிலானதாக உள்ளது. அதனை கடுமையாக எதிர்ப்பேன்” என்றார்.

Also Read: தேதி குறித்த I.N.D.I.A கூட்டணி.. தேர்தல் முடிவு முன்பே எதிர்க்கட்சிகள் ஸ்கெட்ச்!

Latest News