5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்வார்களா? – சீமான் சவால்

கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்வார்களா? – சீமான் சவால்
சீமான்
intern
Tamil TV9 | Updated On: 16 Oct 2024 12:32 PM

மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. வேட்புமனுத்தாக்கல் எல்லாம் நிறைவடைந்தது. தற்போது அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் 40 தொகுதிகளில் நாம்தமிழர்கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் 50% பெண் வேட்பாளர்கள்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு நேற்று வந்த சீமான், கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது: பூமித்தாய் வெப்பம் ஆகாமல் இருக்க ஒரே வாய்ப்புதான் உள்ளது. மரம் வளர்க்க வேண்டும். இங்கே ‘கிளீன் இந்தியா’ இருக்கிறது. ஆனால் ‘கிரீன் இந்தியா’ இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டு பசுமை திட்டம், பல கோடி பனைத்திட்டம் என்று பல்வேறு திட்டங்களை போட்டு இயற்கை தாயை பச்சை போர்வையால் போர்த்துவோம். தக்காளி, வெங்காயம், வெள்ளைப்பூண்டுக்கு கூட ஆட்சியில் இருப்பவர்களால் உரிய விலை வைத்து கொடுக்க முடியவில்லை. வெங்காயத்தை கூட பாலைவன நாடான எகிப்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னை கேட்காமல் உங்கள் வீட்டில் வளர்க்கும் மரத்தை கூட வெட்ட முடியாது. 100 மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு என்று ஒரு சட்டம் என்னிடம் உள்ளது. 100 மரம் நட்டு விட்டு வந்தால் மரம் வெட்ட அனுமதி தருவேன்.

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க.வும், கருணாநிதி சமாதியில் தி.மு.க.வும் சத்தியம் செய்துவிட்டு வர சொல்லுங்கள் பார்க்கலாம். அப்புறம் என்னை ஜெயித்து காட்ட சொல்லுங்கள்.” என்றார்.

Latest News