TVK first conference: உடைந்த நாற்காலிகள்.. குப்பையான மாநாட்டு திடல்.. விஜய் மாநாட்டின் தற்போதைய நிலை! - Tamil News | lot of broken chairs and empty water bottles collected from tamilaga vettri kazhagam conference area | TV9 Tamil

TVK first conference: உடைந்த நாற்காலிகள்.. குப்பையான மாநாட்டு திடல்.. விஜய் மாநாட்டின் தற்போதைய நிலை!

Tamilaga Vettri Kazhagam: மாநாட்டுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்ததால் அந்த இடமே ஸ்தம்பித்து போனது. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிட்டதட்ட 8 லட்சம் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் விஜய் பாஜக, திமுக கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

TVK first conference: உடைந்த நாற்காலிகள்.. குப்பையான மாநாட்டு திடல்.. விஜய் மாநாட்டின் தற்போதைய நிலை!

மாநாட்டு நடைபெற்ற இடத்தின் தற்போதைய நிலை

Updated On: 

28 Oct 2024 15:42 PM

தமிழக வெற்றிக் கழகம்: விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடத்தில் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சுற்று வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் இருந்து அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் வித்தியாசமில்லாமல் மாநாட்டில் கலந்து கொண்டது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது.

Also Read: TVK first conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு.. தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர், முதல் முறையாக அரசியல் மேடை ஏறுகிறார். என்ன பெரிதாக பேசிவிடப் போகிறார் என காத்திருந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இருந்ததாக சமூக வலைத்தளங்கள் முழுக்க அவரது தொண்டர்கள் உணர்ச்சி பெருக்கோடு கொண்டாடி வருகிறது. தனது தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் காரணம், கொள்கைகள், கொடி வடிமைக்கப்பட்ட காரணம் என அனைத்தையும் முதல் மாநாட்டில் தெரிவித்தார் விஜய்.

மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 6 மணி முதலே கூட்டம் கூட்டமாக பலரும் மாநாடு நடக்கும் இடத்திற்குள் நுழைந்தனர். பவுன்சர்கள் நிறுத்தப்பட்ட போதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைவரும் திணறினர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நாற்கலிகளை தலைக்கு மேல் ஏந்தி விஜய் வருகைக்காக சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் காத்திருந்தனர்.

இப்படியான நிலையில் மாநாட்டுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்ததால் அந்த இடமே ஸ்தம்பித்து போனது. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிட்டதட்ட 8 லட்சம் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் விஜய் பாஜக, திமுக கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மாநாடு திடலில் அமைக்கப்பட்ட 50 ஆயிரம் இருக்கைகளில் 15 ஆயிரம் இருக்கைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புயல் அடித்து ஓய்ந்தது போல அந்த இடமே காட்சியளிக்கிறது. மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு வைக்கப்பட்ட தண்ணீர் போதிய அளவு இல்லாத காரணத்தால் பலரும் வெளியிடங்களில் இருந்து தண்ணீர் பாட்டிலோடு உள்ளே வந்தனர். இதனால் அந்த இடம் முழுவதும் தண்ணீர் பாட்டில் குப்பைகள், காலணிகள்  என ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.

Also Read: Tirupati: திருப்பதியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

15 ஆயிரம் இருக்கைகள் உடைக்கப்பட்டு, காலி தண்ணீர் பாட்டில்கள் போடப்பட்டு மாநாடு நடைபெற்ற இடம் குப்பை கூளமாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம் மழைக்காலமாக இருப்பதால் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அருகே விளைநிலங்களும் இருப்பதால் அப்பகுதிக்கு குப்பைகள் சென்று விடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநாடு பந்தல் அமைத்தவர்கள் உடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி நல்ல நிலையில் உள்ள இருக்கைகளை மட்டும் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு முடிந்து போகும்போது அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி காலனிகளை விட்டு சென்றதால் அதிகமான காலணிகள் கிடைக்கின்றன. அதேசமயம் மாநாட்டு திடலில் போடப்பட்ட மின் விளக்குகள் மற்றும் மேடையை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் மாநாட்டு திடலை பார்வையிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!
உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது