5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Lulu Mall: சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்..! 3 மெட்ரோ ரயில் நிலையம் அருகே வரப்போகும் லூலு மால்.. எங்கே தெரியுமா?

Chennai Lulu Mall: கோவை மாநகரத்தை அடுத்து சென்னையிலும் அடுத்த ஆண்டு லூலு மால் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், ஷெணாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் அடித்தளத்தில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். 40,000 சதுர அடி பரப்பளவில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள, கான்கோர்ஸ் மட்டத்தில் லூலு மால் அமைக்கப்படும். அதே சமயம், விம்கோ நகர் டிப்போ ஸ்டேஷனில், கிட்டத்தட்ட 60,000 சதுர அடி இடத்தில் லூலு மால் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Lulu Mall: சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்..! 3 மெட்ரோ ரயில் நிலையம் அருகே வரப்போகும் லூலு மால்.. எங்கே தெரியுமா?
சென்னை லூலு மால்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 19 Jun 2024 15:54 PM

சென்னையில் லூலு மால்: கோவை மாநகரத்தை அடுத்து சென்னையிலும் அடுத்த ஆண்டு லூலு மால் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், ஷெணாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கிரேஸ் சர்வீஸ் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நிறைவுபெறும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே லூலு மால் வருவதால் மக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மிகவும் பிரபலமான நிறுவனங்களுள் ஒன்று லூலு நிறுவனம். இந்தியாவில் இருக்கும் பல்வேறு பெரு நகரங்களில் லூலு மால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் படிப்படியாக லூலு நிறுவனம் வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கோவை லட்சிமி மில்ஸ் அருகே இந்த லூலு மால் தொடங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வரிசையில் அடுத்து சென்னையில் லூலு மால் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஷாப்பிங் மால்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் அடுத்த ஆண்டு முதல் லூலு மால் சென்னையில் செயல்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈசிஆரில் இருக்கும் ஈஞ்சம்பாக்கத்தில் இந்த மால் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது போக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து மேலும் 3 லூலு மால்கள் கட்டமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம், ஷெணாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே லூலு மால் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: விஜய் சினிமாவை விட்டு விலகுவது குறித்து கஸ்தூரி ஓபன் டாக்

இதற்கான ஒப்பந்தம் கிரேஸ் சர்வீஸ் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் அருகே லூலு மால் அமைக்கப்படும் நிலையில், இது அதிக பயணிகளை ஈர்க்கும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.சார்லஸ் வசந்தகுமார் இது தொடர்பாக பேசுகையில், ” ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் அடித்தளத்தில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். 40,000 சதுர அடி பரப்பளவில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள, கான்கோர்ஸ் மட்டத்தில் லூலு மால் அமைக்கப்படும். அதே சமயம், விம்கோ நகர் டிப்போ ஸ்டேஷனில், கிட்டத்தட்ட 60,000 சதுர அடி இடத்தில் லூலு மால் கட்டப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒப்பந்தம், கேப்டன் பொறுப்பும் இரண்டும் வேண்டாம்.. கேன் வில்லியம்சன் அதிரடி முடிவு..!

Latest News