மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் சோதனையில் நடந்தது என்ன? - Tamil News | madurai 4 cbse schools recieved bimb threat police investigated with the help of bomb squad know more in details | TV9 Tamil

மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் சோதனையில் நடந்தது என்ன?

Published: 

30 Sep 2024 21:27 PM

மூன்று பள்ளிகளிலும் சிறப்பு தேர்வு நடைபெற்றதன் காரணமாக மாணவர்கள் உள்ளே தேர்வு எழுதிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே 3 பள்ளிகளிலும் காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்திய தகவல் அறிந்த ஏராளமான பெற்றோர்கள் பள்ளி நுழைவாயில் முன்பாக வருகை தந்து தங்களது குழந்தைகளை வெளியே அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் சோதனையில் நடந்தது என்ன?

கோப்பு புகைப்படம்

Follow Us On

மதுரையில் 4 சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா, பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா பள்ளி மற்றும் வேலம்மாள் போதி கேம்பஸ் உள்ளிட்ட 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளி நிர்வாகத்திற்கு இன்று காலை 5 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாற்று வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் 1 மணி பள்ளி வளாகம் முழுவதிலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் எந்த பள்ளிகளும் எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறை விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.

Also Read: சேலையூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை.. எந்தெந்த ஏரியா? லிஸ்ட் இதோ..

குறிப்பாக மூன்று பள்ளிகளிலும் சிறப்பு தேர்வு நடைபெற்றதன் காரணமாக மாணவர்கள் உள்ளே தேர்வு எழுதிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே 3 பள்ளிகளிலும் காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்திய தகவல் அறிந்த ஏராளமான பெற்றோர்கள் பள்ளி நுழைவாயில் முன்பாக வருகை தந்து தங்களது குழந்தைகளை வெளியே அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதனையடுத்தாக பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறை சார்பிலும் பெற்றோர்கள் பதட்டம் அடைய வேண்டாம் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மாணவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.மேலும் போலியான மிரட்டல் இமெயில் மூலமாக அனுப்பிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுதி நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

Also Read: பக்தர்களே! திருப்பதியில் நாளை அனைத்து தரிசனங்களும் ரத்து.. ஏன் தெரியுமா?

இது ஒரு பக்கம் இருக்க தேனியில் சொக்த்துக்காக ஆசைப்பட்டு தம்பதியினரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரூ.40 கோடி சொத்துக்காக தேனியைச் சேர்ந்த தம்பதியினரை கடத்திக் கொடூரமாக கொலை செய்து ஒருநாள் முழுவதும் காரிலேயே சடலங்களை வைத்து தருமபுரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தடங்கம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஆண், பெண் சடலங்கள் கத்திக் குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இருவரையும் வேறு இடத்தில் கொலை செய்து உடல்களை எடுத்து வந்து இங்கு வீசிச் சென்றது தெரியவந்தது.

உயிரிழந்தவர்கள், மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் ஆன்லைன் மூலம் டிரேடிங் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு எராளனமான சொத்துக்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ரூ.40 கோடி சொத்துக்காக தம்பதியினரை கடத்தி கொடூரமாக கொலை செய்து உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு திராட்சை Vs பச்சை திராட்சை : எது பெஸ்ட்?
எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
காபி குடிப்பதால் உடலில் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா?
வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா?
Exit mobile version