5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி…சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய தமிழக அரசு!

Madurai AIMS: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து, நேற்று முறையாக அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனை தொடர்ந்து, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி…சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய தமிழக அரசு!
மதுரை எய்ம்ஸ்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 May 2024 10:40 AM

எய்ம்ஸ் மருத்துவமனை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015ல் மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, தோப்பூரில் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்படும் இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்த, தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,624 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக பணிகள் தொடங்காமல் இருந்தது. மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்ட நிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டன.

சுற்றுச்சூழல் அனுமதி: 

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கட்டுமான பணிக்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. நாட்டின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி நிறுவனம் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டரை எடுத்தது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் மக்களவை தேர்தலுக்கு முன் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடத்தியது.

Also Read : Tamilnadu Weather: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 4 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

அதன்பிறகு, கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதற்கு சுற்றுச்சுழல் அனுமதி வழங்கப்படாதது தான் காரணம். எனவே, கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் விண்ணப்பித்தது. இந்த நிலையில்,  மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

விரைவில் கட்டுமான பணிகள்:

இதற்கிடையில், கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, எய்ம்ஸ் நிர்வாககத்துக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தது.  மேலும், கடந்த 18ஆம் தேதி மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் உறுப்பினர் குழு உறுப்பினராக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடியை நியமனம் செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான், தமிழக அரசு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து, நேற்று முறையாக அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனை தொடர்ந்து, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  33 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

Also Read : பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை… சோஷியல் மீடியா அழுத்தமா? விசாரணை தீவிரம்!

Latest News