5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மதுரை சிறையில் ரூ.1.63 கோடி மோசடி.. சிக்கிய 3 அதிகாரிகள்.. அதிரடி காட்டிய போலீஸ்!

Madurai Crime News : மதுரை மத்திய சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு ரூ.1.63 கோடியில் மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடலூர் மத்தி சிறை காவல் கண்காணிப்பாளர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை சிறையில் ரூ.1.63 கோடி மோசடி.. சிக்கிய 3 அதிகாரிகள்.. அதிரடி காட்டிய போலீஸ்!
மதுரை மத்திய சிறை (picture credit : X)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Dec 2024 10:31 AM

மதுரை மத்திய சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு ரூ.1.63 கோடியில் மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடலூர் மத்தி சிறை காவல் கண்காணிப்பாளர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் மூலம் எழுதுபொருட்கள் தயாரிக்கப்பட்டு, அரசுத்துறை அலுவலகங்களுக்கும், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மத்திய சிறைத்தறை நிர்வாகம் முலம் ரு.1.63 கோடியில் எழுது பொருட்கள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

மதுரை சிறையில் மெகா மோசடி

இந்த புகார் தொடர்பாக மதுரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிறைத்துறை மூலம் ரூ.1 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்யும்போது, இணையவழியில் கொள்முதல் செய்து இணைவழி ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விதிகளை சிறைத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீறியுள்ளதாக புகார் எழுந்தது. இதன் மூலம் ஊழல் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது.  அதாவது, மூலப்பொருட்கள் வாங்குவது போல் ஆவணங்கள் மற்றும் பில்களை தயாரித்து, அவற்றை மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

சிறைத்துறை அதிகாரிகள் பதிவேடுகளிலும் தவறாக பதிவு செய்து, 1.63 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ரசீது பதிவேடுகளில் தவறான பதிவுகள் செய்து மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. முதன்மை ஆதாரம் இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

Also Read : வன்கொடுமை செய்து சிறுவன் கொலை.. பகீர் வாக்குமூலம்.. கோவில்பட்டியில் ஷாக்!

சிக்கிய 3 அதிகாரிகள்

இதனை அடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், 3 அதிகாரிகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் படி, மதுரை சிறை முன்னாள் எஸ்பி எம் ஊர்மிளா (தற்போது கடலூர் சிறை எஸ்பி), முன்னாள் ஜெயிலர் எஸ் வசந்த கண்ணன் (தற்போது பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் எஸ்பி), அப்போதைய நிர்வாக அதிகாரி எம்.தியாகராஜன் மற்றும் 8 பேர் மீது வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், 8 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மதுரையைச் சேர்ந்த வி.எம்.ஜஃபருல்லாகான், அவரது மகன்கள் வி.எம்.ஜே. முகமது அன்சாரி மற்றும் வி.எம்.ஜே. முகமது அலி, சென்னையைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீனிவாசன், அவரது மனைவி எஸ்.சாந்தி, திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரசுப்பு, இவரது மனைவி எஸ்.தனலட்சுமி மற்றும் சென்னையைச் சேர்ந்த எம் வெங்கடேஸ்வரி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read : இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்.. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. எந்நெத்த மாவட்டம்?

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும்,  மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. குறிப்பாக சைபர் மோசடி அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப், போன் கால், ஆன்லைன் லோன் ஆப் என பல வழிகளில் பணம் கொள்கையடிக்கப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர். இப்படியாக மோசடி நடக்கும்  சூழலில், தற்போது மதுரை சிறையிலேயே அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.1.63 கோடிக்கு மோசடி அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 அதிகாரிகள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News