Madurai: கோரிப்பாளையத்தில் பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விபத்து.. 4 பேர் படுகாயம்..
தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தினால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
மதுரை கோரிப்பாளையம் அருகே பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தினால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் கோரிப்பாளையம் அருகே ரூ.190 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் இரவு பகலாக மேற்கொள்ளப்படுகிறது.
சாரம் அருந்து 4 பேர் படுகாயம்:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அழகர்கோயில் சாலையில் தல்லாகுளம் பகுதி – பாலம் ஸ்டேஷன் பகுதி – அரசு மருத்துவக் கல்லூரி ஆகிவற்றிற்கான இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்களுக்கு இடையே இரும்பு சாரம் அமைக்கப்பட்ட போது நேற்று இரவு இரண்டு பாலங்களுக்கு இடையே பாரம் தாங்காமல் திடீரென இரும்பு சாரம் முழுமையாக சரிந்து விழுந்தது.
Also Read: சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்.. எப்போது உருவாகும்? எந்த திசையில் நகரும்?
அந்த இடத்தில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், நான்கு பேருக்கு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு படுகாயம் அடைந்த 4 பேரையும் அருகில் இருக்கும் ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சாரம் எப்படி அருந்து விழுந்தது என்பது தொடர்பாக செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ச்சியாக பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தற்காலிகமாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு சாலை இரு பக்கமும் வாகனங்கள் செல்லும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
Also Read: திமுக மீதான விமர்சனத்தில் கவலை இல்லை – விசிக தலைவர் திருமாவளவன்..
இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் சாலைகள் சேரும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நெடுஞ்சாலை துறை இதில் கவனம் மேற்கொண்டு மழைநீர் தேங்கா வண்ணம் சர்வீஸ் சாலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.