”காசெல்லாம் வேணாம் சார்” மகன் படித்த அரசுப் பள்ளி.. இலவசமாக கட்டடப் பணி செய்த தந்தை.. மதுரையில் நெகிழ்ச்சி! - Tamil News | madurai goverment school former student father do free mason work for school | TV9 Tamil

”காசெல்லாம் வேணாம் சார்” மகன் படித்த அரசுப் பள்ளி.. இலவசமாக கட்டடப் பணி செய்த தந்தை.. மதுரையில் நெகிழ்ச்சி!

Updated On: 

21 Aug 2024 09:06 AM

மதுரையில் மகன் படித்த அரசுப் பள்ளிக்கு இலவசமாக தந்தை பூச்சுப் பணி செய்து கொடுத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக பள்ளிச் சுவர்களில் பூச்சுப் பணி, வெள்ளை அடித்தல், வளாகத் தூய்மை என பல்வேறு வேலைகளை செய்தார் அழகு முருகன். பணிகளை முடித்த அழகு முருகன் கூலியை வாங்கு மறுத்துள்ளார். கூலி பெற மறுத்த முருகன், இந்த பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

”காசெல்லாம் வேணாம் சார் மகன் படித்த அரசுப் பள்ளி.. இலவசமாக கட்டடப் பணி செய்த தந்தை.. மதுரையில் நெகிழ்ச்சி!

மதுரை பள்ளி

Follow Us On

நெகிழ்ச்சி சம்பவம்: மதுரையில் மகன் படித்த அரசுப் பள்ளிக்கு இலவசமாக தந்தை பூச்சுப் பணி செய்து கொடுத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு முருகன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார. இவரது மகன் பீமன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தார். தற்போது பீமன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம் நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதாரம் படித்து வருகிறார். வீட்டின் வறுமை சூழலில் பீமன் படித்து வருகிறார். இந்த நிலையில், தான் மகன் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று நாட்களாக கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டடப் பணிகளை செய்வதற்காக அழகு முருகனை பள்ளியில் தலைமை ஆசிரியர் அழைத்திருந்தார்.

Also Read: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?

இவரும் கடந்த 3 நாட்களாக பள்ளிச் சுவர்களில் பூச்சுப் பணி, வெள்ளை அடித்தல், வளாகத் தூய்மை என பல்வேறு வேலைகளை செய்தார். பணிகளை முடித்த பிறகு தலைமை ஆசிரியர் இவருக்கு கூலி வழங்கினார். அப்போது, அதை பெற மறுத்து இலவசமாக செய்து கொடுப்பதாக அழகு முருகன் கூறியுள்ளார். மேலும், இந்த பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

இலவசமாக பூச்சுப்பணி செய்த தந்தை

இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுத்த இப்பள்ளிக்கு பணி செய்வது எனது விருப்பம். எனது உழைப்பிற்கான கூலியை பெறாமல் மகிழ்ச்சியுடன் இந்த பள்ளிக்காக அர்ப்பணிக்கிறேன்” என்றார். இதுகுறித்து அப்பள்ளியில் பொருளியல் ஆசிரியர் கூறுகையில், “மாணவன் பீமன் சில மாதங்களுக்கு முன் பள்ளிக்கு வந்து பூச்செடிக்கு மற்றும் மரக்கன்றுகளை நட்டார்.

Also Read: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. வெடித்த போராட்டம்.. பள்ளிகள் சூறை.. பதற்றத்தில் மகாராஷ்டிரா!

அவரின் இந்த சேவையை அறிந்து தனியார் நிறுவனர் மாணவர் பீமனின் உயர்கல்விக்கு ரூ.25,000 வழங்கி உதவி செய்துள்ளளது. இதன் தொடர்ச்சியாக தந்தை அழகு முருகனுக்கு இந்த பள்ளிக்கு இலவசமாக பராமரிப்பு பணி செய்துள்ளார்” என்றார். இதனால், மாணவன் பீமன் மற்றும் கொத்தனார் அழகு முருகனை தலைமை ஆசிரியர் பாராட்டி உள்ளார்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version