5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Madurai Fire Accident: ஃபிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற விடுதி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்தும் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது

Madurai Fire Accident: ஃபிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து..  2 பேர் உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
கோப்பு புகைப்படம் (pic courtesy: unsplash)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 12 Sep 2024 12:27 PM

மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து: மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் இரு பெண்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ஏராளமான பெண்களின் சான்றிதழ்கள் தீயில் கருகி சேதம்டைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற விடுதி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்தும் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது

இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் புகை வெளியே வந்த விடுதிக்குள் சென்ற தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்

இந்நிலையில் விடுதியில் இருந்த பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக வெளியேறிய நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்த நிலையில் பரிமளா என்ற ஆசிரியையும், சரண்யா என்ற பெண் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் விடுதி்வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த இருவரின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்டமாக ஃப்ரிட்ஜ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளட் நிலையில் இது தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

மேலும் படிக்க: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்!

இந்த பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தில் உரிமையாளர் பேசியபோது ஏற்கனவே பல ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் என மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த நோட்டீசை விடுதி உரிமையாளரிடம் வழங்கியதாகவும் ஆனாலும் தொடர்ந்து விடுதி செயல்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும் விடுதிக்கான எந்தவித அனுமதியும் பெறாமல் இதுபோன்று விடுதி நடத்தியதாக கட்டிட உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில் தீ விபத்து நடைபெற்ற இடத்தில் கோட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்

அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல்வேறு பெண்களுடைய கல்வி சான்றுகள் முழுவதுமாக எரிந்து கருகியதால் அவர்கள் சான்றிதழ்களை இழந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதிகாலை 4 மணி என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது இது போன்ற விபத்து ஏற்பட்டதால் பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் அங்குள்ள தங்கு விடுதியில் அடுத்தடுத்து போதிய பாதுகாப்பு இல்லாத சூழலில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவசர கால பாதை உள்ளிட்டவைகள் எதுவும் இல்லாமல் சிறைச்சாலை போன்று செயல்பட்டு வந்துள்ளது.

மேலும் படிக்க: தொடர் விடுமுறை எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் உரிய எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையும் அதனை அலட்சியமாக கருதியதால் இது போன்ற விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடுதியில் வார்டன் புஷ்பா என்பவரே இதனுடைய உரிமையாளராகவும் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பெண்கள் விடுதியில் வாழ்தனான புஷ்பாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விடுதியில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை பெறுவதில் காவல்துறையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விடுதியில் 40 பேர் தங்கி இருந்த நிலையில் தீபத்தை ஏற்பட்ட போது 20க்கும் மேற்பட்டோர் விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest News