மதுரை மீனாட்சியம்மன் கோயில்.. “ செயற்கை காலை அகற்ற கட்டாயப்படுத்தினர்” – மாற்றுத்திறனாளி பெண் வெளியிட்ட வீடியோ..
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கோயிலுக்குள் செல்ல செயற்கை காலை அகற்ற காவல்துறையினர் கட்டாயப்படுத்தியதாகவும், சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்ல கோயில் ஊழியர்கள் 500 ரூபாய் பணம் கேட்டதாகவும் மாற்றுத்திறனாளி பெண் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணின் செயற்கை காலை அகற்றச்சொல்லி காவலர்கள் துன்புறுத்தியாக குற்றச்சாட்டு, உண்மைக்கு புறம்பான வீடியோவை வெளியிட்டதாக மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணின் செயற்கை காலை அகற்றச்சொல்லி காவலர்கள் துன்புறுத்தியதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு மாற்றுத்திறனாளி குற்றஞ்சாட்டி இருந்தார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது கோயிலுக்குள் செல்ல செயற்கை காலை அகற்ற காவல்துறையினர் கட்டாயப்படுத்தியதாகவும், சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்ல கோயில் ஊழியர்கள் 500 ரூபாய் பணம் கேட்டதாகவும் மாற்றுத்திறனாளி பெண் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது..
இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணின் புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக மதுரை மாநகர காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டனர், அதில் ” கடந்த 06.08.2024 அன்று காலை 0930 மணியளவில் தருமபுரியைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான திருமதி.தமிழ்ச்செல்வி, 48/24, என்பவர் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமிதரிசனம் செய்வதற்க்காக வந்தபொழுது காவல்துறையிரனர் தன்னை சாமி தரிசனம் செய்யவிடாமலும், வீல்சேரில் அழைத்துச்செல்வதற்காக கோவில் பணியாளர்கள் பணம் கேட்டு அலைக்கழிப்பு செய்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Priests&policemen at Madurai Meenakshi Amman temple have forced disabled Tamilselvi to remove her prosthetic leg!
While asking wheelchair, staff demanded ₹500/-
While protested, they abused & said “Go &complain with Stalin! Complain with Stalin’s son! Complain with Sekar Babu! pic.twitter.com/MOEjiLDueB
— S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன் (@SNAMBURAJAN) August 7, 2024
மேற்கூறிய தமிழ்செல்வி என்பவர் கடந்த 06.08.2024 அன்று சாமிதரிசனம் செய்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் வழியாக காலை 0930 மணிக்கு வந்துள்ளார். அப்போது பணியிலிருந்த காவலர்கள் அவருடைய கைப்பையில் சிறிய அளவிலான கத்தி இருந்ததால் பாதுகாப்பு காரணம் கருதி அதனை பொருட்கள் வைப்பறையில் வைத்துவிட்டுவரக் கூறியுள்ளனர். அவருடன் உதவிக்காக உடன்வந்த நபர்கள் பொருட்கள் வைப்பறையில் வைத்துவிட்டு வந்துள்ளார். மேலும் அவர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய உள்ளே செல்ல இருந்ததால் அவர் அணிந்திருந்த செயற்கை காலில் இணைக்கப்பட்ருந்த காலணிகளை அகற்றிவிட்டு வீல்சேரில் செல்லும்படி காவலர்களும், கோவில் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் அவர் காலணிகளை அகற்றிவிட்டு வீல்சேரில் சென்று நல்ல முறையில் சாமி தரிசனம் செய்து, அன்னதானம் சாப்பிட்டுவிட்டு மதியம் சுமார் 1230 மணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் சமூக வலைதளத்தில் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக காவல்துறையிரும், கோவில் பணியாளர்களும் தன்னை சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்ததாக தவறான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.