5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vande Bharat: இனி மதுரை டூ பெங்களூரு ஈசியாக பயணிக்கலாம்.. இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கம்..!

மக்களின் வசதிக்காக இன்று முதல் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இன்று அதிகாலை 5 மணி அளவு மதுரை சந்திப்பில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 7 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. அங்கிருந்து 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக மதியம் 1 மணி அளவில் பெங்களூருக்கு சென்றடையும்.

Vande Bharat: இனி மதுரை டூ பெங்களூரு ஈசியாக பயணிக்கலாம்.. இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கம்..!
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2024 08:34 AM

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்: மக்களின் வசதிக்காக இன்று 6 முதல் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜூலை 29 ஆம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 5 மணி அளவு மதுரை சந்திப்பில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 7 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. அங்கிருந்து 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக மதியம் 1 மணி அளவில் பெங்களூருக்கு சென்றடையும். இந்த வந்தே பாரத் ரயில் மூலம் மதுரையில் இருந்து பெங்களூருக்கான பயண நேரம் குறையும்.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை – கோவை, சென்னை – நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர், கோவை டூ பெங்களூரு என வந்தே பாரத் ரயில் செயல்பட்டு வருகிறது.

Also Read: முக்கியச் செய்திகள் இன்று.. உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

அந்த வகையில் இன்று முதல் மதுரையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல சுமார் 10 மணி நேரமாகும். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் வந்தே பாரத் ரயில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் மக்களின் வசதிக்காக புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. முதலில் சோதனை முறையில் ஒரு மாத காலத்திற்கு இந்த ரயில் இயக்கப்படும் எனவும், பின்னர் மக்களின் வருகை பொறுத்து வழக்கமான சர்வீஸாக மாற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு காலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும். பின், இரவு 7.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. பின் 7.45 மணிக்கு புறப்பட்டு 9.45 மணிக்கு மதுரையை வந்தடைகிறது.

Also Read: ரெட்மீ நோட் 13 ப்ரோ விலை அதிரடி குறைப்பு; இப்படி வாங்குங்க.. இன்னும் கம்மியா கிடைக்கும்!

Latest News