5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காவலர் குடியிருப்பு பகுதியில் வெடித்த மர்ம பொருள்.. மாமல்லப்புரத்தை உலுக்கிய சம்பவம்..

மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவிஅபிராம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மர்ம பொருள் வெடித்து அந்த கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்வையிட்டனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறை உதவி அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்தனர்.

காவலர் குடியிருப்பு பகுதியில் வெடித்த மர்ம பொருள்.. மாமல்லப்புரத்தை உலுக்கிய சம்பவம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Oct 2024 13:11 PM

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏறபட்டுள்ளது. மேலும், அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளீர் காவல் நிலையம் அருகில் யாரும் வசிக்காத பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பாழடைந்த கட்டிடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று இரவு 8 .மணி அளவில் மாமல்லபுரம் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்ததால் அந்த பாழடைந்த கட்டிடத்தில் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது.

Also Read: ஓட்டுநர் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவிஅபிராம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மர்ம பொருள் வெடித்து அந்த கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்வையிட்டனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறை உதவி அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்தனர்.

அதனை தொடர்ந்து, இந்த பாழடைந்த கட்டிடத்தில் வெடித்த மர்ம பொருள் என்ன? இந்த குடியிருப்பில் வசித்து விட்டு சென்றவர்கள் விட்டு சென்ற சிலிண்டர் ஏதாவது வெடித்து இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் கசிந்து இந்த தீவிபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சேவைகளை தவறாக பயன்படுத்திய ஊழியர்கள்.. பணி நீக்கம் செய்து ஷாக் கொடுத்த மெட்டா!

மேலும் இன்று (வெள்ளி) காலையில் போலீசார் மர்ம பொருள் வெடித்த கட்டிடத்திற்குள் சென்று சோதனை நடத்திய பிறகே என்ன மாதிரியான பொருள் வெடித்து இந்த கட்டிடம் சேதமடைந்தது என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் மர்ம பொருள் வெடித்ததால் அந்த கட்டிடத்தில் காங்கிரிட் சிதறல்கள் அங்குள்ள சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் மர்ம பொருள் வெடித்த அதிர்வில் அருகில் உள்ள இரண்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி தூள், தூளாக கீழே சிதறி கிடந்ததை காண முடிந்தது.

Latest News