வெளிய போறீங்களா மக்களே..! சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா?
பொதுவாக ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி வரும். அதற்கு முந்தைய மாதமான ஆடியில் ஆடிப்பெருக்கின் போது வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை எல்லாம் கரைத்துக் கொண்டு போய்விடும். அதனால் அங்கே நீர் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் எந்த இடத்தில் களிமண் வளம் அதிகமாக உள்ளதோ அதில் உள்ள நீர் பூமிக்கடியில் இறங்கும். அப்படியான தத்துவத்தின் அடிப்படையில் தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை ஆற்றில் கரைக்க செய்கிறார்கள்.
சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனைமுகன், முழு முதற்கடவுள் விநாயகர் அவதரித்த தினமாக ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஒவ்வொரு வீதிக்கும் இருக்கும் விநாயகர் சிலைகளும், அவரது வழிபாட்டின் போது படைக்கப்படும் கொழுக்கட்டை, பொரி போன்ற நைவேத்தியங்களும் தான். சிறியது முதல் பெரியது வரை விநாயகர் சிலைகள் வாங்கப்பட்டு ஒவ்வொரு வீதியிலும் இந்த நாள் பிரதிஷ்டை செய்யப்படும். இதிலிருந்து 3ஆம் நாள், 5 ஆம்நாள், 7 ஆம் நாள் ஆகிய ஒற்றைப்படை தினங்களில் அருகில் உள்ள ஆறுகள், குளங்கள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்.
அதாவது பொதுவாக ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி வரும். அதற்கு முந்தைய மாதமான ஆடியில் ஆடிப்பெருக்கின் போது வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை எல்லாம் கரைத்துக் கொண்டு போய்விடும். அதனால் அங்கே நீர் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் எந்த இடத்தில் களிமண் வளம் அதிகமாக உள்ளதோ அதில் உள்ள நீர் பூமிக்கடியில் இறங்கும். அப்படியான தத்துவத்தின் அடிப்படையில் தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை ஆற்றில் கரைக்க செய்கிறார்கள்.
மேலும் படிக்க: ஜெர்மணியில் செம்ம வேலை.. செவிலியர்களுக்கு இலவச விசா, டிக்கெட்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
அதன்படி சென்னையில் இன்று விநாயகர் சிலை கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது. கடந்த ஒரு வாரமாக பவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை இன்று வெகு விமர்சையாக கரைக்கப்பட உள்ளது. இதனால் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், “ விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு 15.09.2024 ஞாயிற்றுகிழமையன்று சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் ஸ்ரீனிவாசபுரம், பட்டினம்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டுவரப்படும். இதை முன்னிட்டு காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும் பட்சத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..
- விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே.சாலை ஸ்ரீ.எம் தெரு – இடது லஸ் சந்திப்பு – அமிர்தஜன் சந்திப்பு – டிசெல்வா சாலை வாரன் சாலை வலது டாக்டர்.ரங்கா சாலை – பீமனா கார்டன் சந்திப்பு – இடது திருப்பம் – சிபி ராமசாமி சாலை செயின்ட் மேரிஸ் சந்திப்பு – காளியப்பா சந்திப்பு – இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ ஆர்.கே.மட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
- விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக சாந்தோம் சாலை வழியாக வெளிச்செல்லும் வாகனங்கள், காந்தி சிலையிலிருந்து வலதுபுறம் ஆர்.கே. சாலை வி.எம்.தெரு இடது Luz சந்திப்பு – அமிர்தஜன் சந்திப்பு – டி செல்வா சாலை வாரன் சாலை வலது – டாக்டர்.ரங்கா சாலை பீமனா கார்டன் சந்திப்பு – இடது திருப்பம் – சிபி ராமசாமி சாலை செயின்ட் மேரிஸ் சந்திப்பு – காளியப்பா சந்திப்பு இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ – ஆர்.கே. மட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
- ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்புக்கு அருகில் வரும்போது ஜாம் பஜார் P.S-லிருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கஃபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான் கான் சாலையை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
- இந்த ஊர்வலம் டி.எச்.ரோடுக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
- லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
- விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.