Makkaludan Mudhalvar : ‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ என்றால் என்ன? மக்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்.. முழு விளக்கம்!
மக்களுடன் முதல்வர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தருமபுரியில் ஊரக பகுதிகளுக்கான ‛மக்களுடன் முதல்வர்' என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கின.
மக்களுடன் முதல்வர் திட்டம் விரிவாக்கம்: கடந்த ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த திட்டம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தருமபுரியில் ஊரக பகுதிகளுக்கான ‛மக்களுடன் முதல்வர்’ என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கின.
திட்டத்தின் நோக்கம்:
”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் நோக்கம் என்பது அரசு துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்று சேர வேண்டும் என்பது தான். இந்த திட்டத்தின் மூலம் அரசு துறை சேவைகள் பெற மக்கள் மனு அளிக்கும்போது அதன் மீது உடனடியாக தீர்வு காணப்படும். கடந்த அண்டு தொடங்கப்பட்ட இந்த இந்த திட்டத்தின் மூலம், தற்போது வரை மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான் இந்த திட்டம் ஊரகப்பகுதிகளுக்கும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Also Read: கொள்ளையடித்து ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய ராட்மேன்.. போலீசார் கொடுத்த திடுக்கிடும் தகவல்..
இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள்:
- நெடுஞ்சாலைத் துறை சார்பில், 339 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் தருமபுரி முதல் அரூர் மொரப்பூர் சாலை மற்றும் திருவண்ணாமலை முதல் அரூர் தானிப்பாடி சாலை வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி, முடிவுற்ற சிறுபாலங்கள் மற்றும் பாலப் பணிகள்;
- பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4 கோடியே 64 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் பி. துறிஞ்சிப்பட்டி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, பேளாரபள்ளி, பண்டஅள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 22 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 17 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலவில் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான சுகாதாரக் கட்டடம்;
- உயர்கல்வித் துறை சார்பில், 11 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு உள்விளையாட்டு அரங்கம்;
- பால்வளத் துறை சார்பில், 2 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், தருமபுரி பால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் பதப்படுத்தும் மற்றும் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை;
- ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 4 கோடியே 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 8 பள்ளிகளுக்கு 18 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் ;
- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 51 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் அரூர் வட்டம், பீச்சாங்க்கொட்டாய் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 504 அடுக்குமாடி குடியிருப்புகள்:
- நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், 60 இலட்சம் ரூபாய் செலவில் அன்னசாகரம் கங்கரன் கொட்டாய் பகுதியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம்:
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 கோடியே 74 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக தற்சமயம் இயங்கிவரும் பேருந்துகளுக்கு பதிலாக 20 புதிய நகரப் பேருந்துகள்;
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 12 கோடியே 77 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள், பல்நோக்கு மையக் கட்டடம். கூடுதல் பள்ளிக் கட்டடங்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், வட்டார சுகாதார நிலையம், நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையக் கட்டடங்கள். தானிய சேமிப்பு கிடங்குகள், பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுகாதார வளாகங்கள்;
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 42 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பாப்பிரெட்டிப்பட்டி திப்பிரெட்டிஅள்ளியில் துணை சுகாதார நிலையக் கட்டடம்; வட்டாரம்.
- பேரூராட்சிகள் துறை சார்பில். 8 கோடியே 1 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் தருமபுரி மாவட்ட பேரூராட்சி பகுதியில் சிறுவர் பூங்காக்கள். நவீன நிழற்கூடம், வாரச் சந்தை மேம்பாடு, சிசிடிவி கேமராக்கள். சகடு கழிவுநீர் அகற்றும் மேலாண்மை பணிகள், பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகள்:
- வனத்துறை சார்பில், 2 கோடியே 25 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் வனச்சரக அலுவலகக் கட்டடம், குடியிருப்புக் கட்டடங்கள், தீ கட்டுப்பாடு கட்டடம், பெண் வனப்பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்விடக் கட்டடம் மற்றும் வேட்டைத்தடுப்பு முகாம் கட்டடம்;
என மொத்தம் 444 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read: இந்தியன் 2 படம் ஏன் பார்க்க வேண்டும்? – இதை கொஞ்சம் படிங்க!