Sivaganga Crime News: அதிர்ந்த தமிழகம்.. பட்டப்பகலில் காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. திருமணத்திற்கு மறுத்ததால் வெறிச்செயல்!
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவி பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை அரிவாள் மனையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் அதே இடத்திலேயே பாட்டிலால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவி பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை அரிவாள் மனையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் அதே இடத்திலேயே பாட்டிலால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்மலையைச் சேர்ந்த 26 வயதான ஆகாஷ், மாணவியை ஒருதலையாக காதலித்தாகவும், திருமணத்திற்கு மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்:
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் நின்ற பாடில்லை. தினமும் பெண்கள் கொலை செய்யப்படுவதும், பாலியல் ரீதியான துன்புறுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிந்த நபர்களே தான் இந்த குற்றங்களை நிகழ்த்தி வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு வயது 26. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!
இதுகுறித்து அந்த பெண்ணிடம் பலமுறை கூறியதாகவும், இதற்கு அந்த பெண்ணும் மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இளைஞர் ஆகாஷ், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு மாணவி வீட்டார் மறுப்பு தெரிவித்து வீட்டில் இருந்து விரட்டியுள்ளனர்.
காதலியை கொடூரமாக கொன்ற காதலன்
இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ், அந்த பெண்ணை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. அப்போதும் அந்த பெண் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆகாஷ், பெண்ணை கொலை செய்த முடிவு செய்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று பெண்ணின் யாரும் இல்லாததை அறிந்த ஆகாஷ், அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் திருமணம் பற்றி வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு மறுத்த அந்த பெண்ணை வீட்டில் இருந்த அரிவால் மனையால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து தன்னை குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அறிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இருவீட்டாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, இளைஞர் கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050