Manu Bhaker: ஸ்டாலினை தெரியாது.. தமிழ்நாட்டில் வந்து மனுபாக்கர் சொன்ன பதில்!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதிலும் பெறப்பட்டது. சென்னை நொலம்பூரில் உள்ள தனியார் பள்ளியில், மனு பாக்கருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி அவருக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும் என்றும், வீட்டில் அம்மா சுடும் தோசை ரொம்ப பிடிக்கும் எனவும் பதிலளித்தார்.
மனு பாக்கர்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதிலும் பெறப்பட்டது. சென்னை நொலம்பூரில் உள்ள தனியார் பள்ளியில், மனு பாக்கருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி அவருக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும் என்றும், வீட்டில் அம்மா சுடும் தோசை ரொம்ப பிடிக்கும் எனவும் பதிலளித்தார். தொடர்ந்து பிரபல சுற்றுலாத்தலமான மகாபலிபுரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
I Don’t About Mahabhalipuram, Madurai Meenakshi Temple And Also Don’t About TN Chief Minister.
But When Anchor Asked About #Vijay, She Said “Yes I Know” 🔥🔥♥️ -Indian Shooter #ManuBhaker in Recent Interview At Chennai.#hahaarruuunnn pic.twitter.com/LrA0AoKV2o— A r u n 🛐✨ (@hahaarruuunnn) August 20, 2024
இதையும் படிங்க: Ration Card : இனி ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் இதுவா.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
அதற்கு தனக்கு மகாபலிபுரம் தெரியாது என்றும், கோயில்கள் ஒரு சில தான் தெரியும் எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி தெரியுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தெரியாது என தலையசைத்தார். இதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தெரியுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஓ நன்றாக தெரியும். அவர் என்னுடைய டார்லிங் என வெட்கத்துடன் கூடிய சிரிப்போடு பதில் அளித்தார் அவருடைய ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: Astrology: 6 ராசிக்கு கடன் வாங்கினால் யோகம்.. காத்திருக்கும் வாய்ப்பு!
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய மனு பாக்கர், “பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற போது பிரதமர் மோடி தன்னை அழைத்து பாராட்டியதோடு வரும் காலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என உத்வேகப்படுத்தினார். இது உண்மையில் எனக்கு பெருமையான தருணமாக அமைந்தது. வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என நினைத்த எனக்கு நூலிழையில் அதனை தவறவிட்டது ஏமாற்றம்தான் என்றாலும் இந்தியாவுக்காக பதக்கம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார். பின்னர், கல்வி மற்றும் விளையாட்டு இரண்டையும் சமாளித்து வென்றது எப்படி என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “கல்வியை நான் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. அதுபோல்தான் விளையாட்டிலும் விட்டுக்கொடுக்கவில்லை எனக் கூறினார். இரண்டையும் சமமாக கையாண்டு நான் எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறேன் என பெற்றோர்கள் கவனித்தார்கள். அவர்களால் தான் நான் இரண்டிற்கும் முக்கியத்துவம் சரியான அளவில் கொடுக்க முடிந்தது எனவும் கூறினார்