5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai: சுத்தமாகும் நகரம்… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

chennai corporation:சென்னையைப் பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளூரிலும், வெளியூரில் இருந்து வருகை தந்தும் புழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Chennai: சுத்தமாகும் நகரம்… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Aug 2024 14:35 PM

சென்னை மாநகராட்சி: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், அனைவருக்கும் தேவையான சுத்தம், சுகாதார நடவடிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்து வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் கிழித்தெறியப்பட்டது. சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர் நடவடிக்கை அவசியம்

சென்னையைப் பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளூரிலும், வெளியூரில் இருந்து வருகை தந்தும் புழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மறுபக்கம் தொடர்ச்சியாக மெட்ரோ பணிகள் அங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலம் நெருங்கி விட்ட நிலையில் கழிவுநீர் வடிகால் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: Tamilnadu Weather Alert: அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

மேலும் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நெரிசலால் சென்னை திணறி வருகிறது. இப்படியான நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் கீழ் சென்னை மாநகராட்சி அனைத்து பேருந்து நிலையங்களிலும் புதிய மேற்கூரை, இருக்கைகள் அமைத்தது. ஆனால் தொடங்கி சில நாட்கள் வரை பேருந்து நிறுத்தங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தது. ஆனால் சினிமா பட போஸ்டர்கள், தனியார் விளம்பரங்கள், உணவுக்கறைகள் என பலவற்றால் பேருந்து நிறுத்தங்கள் சுகாதாரமின்றி இருப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

Also Read: Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. ரேஷன் பொருட்களில் புது வரவு.. அரசு அசத்தல்!

மேலும் வீடற்றவர்களுக்கு பேருந்து நிறுத்த இருக்கைகள் இரவு நேர படுக்கையாகவும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த இடங்களில் மாநகராட்சியால் செய்யப்பட்டு வரும் சுகாதார பணிகள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த பணிகளை சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News