5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Naam Tamilar Katchi: சீமானிடம் இருந்து விலகும் நாம் தமிழர் நிர்வாகிகள்.. விஜய் கட்சிக்கு செல்கிறார்களா?

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் விலகிய நிர்வாகிகள் அனைவரும் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் நடிகர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Naam Tamilar Katchi: சீமானிடம் இருந்து விலகும் நாம் தமிழர் நிர்வாகிகள்.. விஜய் கட்சிக்கு செல்கிறார்களா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Oct 2024 10:05 AM

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தொண்டர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக பூபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கடந்த 9 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் என்னால் முடிந்த அளவு அனைத்து கட்சி பணிகளையும் சிறப்பாக செய்தேன். 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக ஓரந்தூர் கிளைச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் ஆகவும், 2021 ஆம் ஆண்டு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராகவும்  பதவிகளைப் பெற்றேன். தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டேன். 2021 நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நானும், என் மனைவியும் வேட்பாளராக  நிறுத்தப்பட்டோம்.

இரண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஆகியவையோடு ஒரு உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக வேலை செய்தோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தவிர்த்து வேறு எந்த தேர்தலிலும் நின்ற வேட்பாளர் எவரும் எங்கள் மாவட்டமோ அல்லது தொகுதி சேர்ந்தவரோ கிடையாது. இதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் 75% வேட்பாளரை நிரப்பினோம். கட்சியின் மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

ஆனால் இதுநாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எதையும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொருட்படுத்தவில்லை. இது அனைத்து பொறுப்பாளர்களுக்கும் சமம். இதுதொடர்பாக சீமானிடம் கேட்டால், “இந்த தொகுதியில் எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. என் இஷ்டப்படித் தான் நான் செய்வேன். இருந்தால் இல்லாவிட்டால் கிளம்புங்கள். உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவோ, செலவு செய்யவோ கூறவில்லை” என கூறினார்.

Also Read: Crime: பணக்கார இளைஞர்கள் டார்கெட்.. நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்.. இளம்பெண் கைது!

பலமுறை பேசியும் அவர் மீண்டும், “இருந்தால் இருங்கள்.. இல்லாவிட்டால் கிளம்புங்கள்” என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன?.  நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ, பொருளோ அல்ல. எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரம் மட்டும்தான். அதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மனவருத்தத்துடன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சீமான் பதில் என்ன?

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு. பிரபாகரன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் கடந்த வாரம் கட்சியிலிருந்து விலக்குவதாக அறிவித்தனர். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதற்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கட்சியில் திடீரென்று அதிருப்தி வரத்தான் செய்யும். அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. மாவட்ட நிர்வாகிகள் விலகுவதை நாம் பார்த்துக் கொள்கிறேன் திருப்தி கிடைக்கும் இடங்களுக்கு போய் சேர வேண்டியதுதானே. இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. வளர்ந்து வரும் கட்சிக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும் ஆனால் இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்க கூடாது” என தெரிவித்தார்.

Also Read: வைட்டமின் டி குறைபாடு இருக்கா? அப்போ இதை பாலோ பண்ணுங்க..

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்களா?

இப்படியான நிலையும் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் விலகிய நிர்வாகிகள் அனைவரும் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் நடிகர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

ஆனால் நம்மை நோக்கி கேள்விக்கணைகளை வீசுபவர்களுக்கு இந்த மாநாடு பதில் சொல்ல வேண்டும் என விஜய் தனது அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருந்தார். நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாது மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News