5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Miladi nabi 2024: மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையில் மாற்றம்.. என்னைக்கு லீவ் தெரியுமா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மிலாடி நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்தது. இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையல், தற்போது செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Miladi nabi 2024: மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையில் மாற்றம்.. என்னைக்கு லீவ் தெரியுமா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Sep 2024 16:38 PM

மிலாடி நபி விடுமுறையில் மாற்றம்: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பண்டிகை காலங்களில் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். ஜனவரி மாதம் பொங்கல் தொடங்கி டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வரை அனைத்து பண்டிகைகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாடி நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்தது. இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னாக செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4ஆம் தேதி பிறை தெரியவில்லை என்று தமிழக அரசு தலைமை காஜி தெரிவித்தது. இதையொட்டி செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து, செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் 3 புதிய மின்சார ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா? டைமிங் இதோ!

புதிய தேதி என்ன?

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான அறிவிப்பில் செப்டம்பர் 16 (திங்கள்) விடுமுறை என இருந்தது.

இதனால் செப்டம்பர் 14 (சனி), செப்டம்பர் 15 (ஞாயிறு), செப்டம்பர் 16 (மிலாடி நபி) என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. இதனால் பேருந்துகள், ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். ஆனால், தற்போது விடுமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Also Read:  “டிவி சத்தம் ஏன் அதிகமா இருக்கு?” இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. கோவையில் ஷாக்!

அதே வேளையில் திங்கள் ஒரு நாள் லீவு எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதனால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தப்படி இருக்கும். எனவே, உங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு ரயில், பேருந்து என டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News