5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Toll Gate: காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்.. அமைச்சர் எ.வ. வேலு அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு குறிப்பிட்ட கிலோமீட்டருக்கும் இடையே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Toll Gate: காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்.. அமைச்சர் எ.வ. வேலு அதிர்ச்சி தகவல்
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Sep 2024 20:49 PM

சுங்கச்சாவடி கட்டணம்: தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு குறிப்பிட்ட கிலோமீட்டருக்கும் இடையே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில்  இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது. அதேசமயம் குறிப்பிட்ட ஊரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.

Also Read: Erode: திருமணத்தை மீறிய உறவு.. குடியிருந்த வீட்டுக்கு தீவைத்த ஐபிஎஸ் அதிகாரி

இதனிடையே தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வவேலு இன்று நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக நடைபெறும் வேலைகள் குறித்து ஆய்வு செய்தார். அந்த வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே கண்ணாடி இழை பாலம் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் என்பதை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி தொடக்கத்தில் முடிந்து சுற்றுலா பயணிகளின் வசதிகளுக்காக திறக்கப்படும் என கூறினார்.

Also Read: Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!

இதனைத் தொடர்ந்து மார்த்தாண்டம் உயர் மட்ட பாலம், திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டது” என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இப்படி காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் மூலதனமாக ஆரம்பத்திலிருந்து வசூலிக்கப்பட்ட தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டண வசூலிக்கும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். எனக்கு தெரிந்தவரை தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலம் கடந்தும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டது. இதனை அகற்றக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறோம் என எ.வ.வேலு தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Latest News