5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தமிழக அரசு வேலைவாய்ப்பில் இந்தி மொழி சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்.. அமைச்சர் விளக்கம்!

உதவி எண் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு சமூக நல ஆணையரகத்தின் இணை இயக்குனரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் இந்த காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பிரிவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என இடம் பெற்றிருந்தது.

தமிழக அரசு வேலைவாய்ப்பில் இந்தி மொழி சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்.. அமைச்சர் விளக்கம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Nov 2024 09:43 AM

அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்: தமிழக அரசின் சமூக நலத்துறையின் வேலைக்கான ஆட்சேர்ப்பு பணி தொடர்பான அறிவிப்பில் தவறுதலாக இந்தி மொழி இடம் பெற்றிருந்தது பல தரப்பிலும் எதிர்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் அளித்துள்ளதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். தமிழக அரசில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளில் பல்வேறு விதமான பதவிகளுக்கு அவ்வப்போது ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சமூக நல ஆணையரகம் மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் “மகளிர் உதவி 181” சென்னையில் செயல்பட்டு வருகிறது.

Also Read: Traffic Diversion: சென்னையின் முக்கிய சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா?

வெளியான அறிவிப்பால் சர்ச்சை

இந்த உதவி எண் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு சமூக நல ஆணையரகத்தின் இணை இயக்குனரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் இந்த காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பிரிவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.

அவர் தனது அறிக்கையில், “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில் தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தி தெரிந்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என திமுக கூறுவது அப்பட்டமான இந்தி திணிப்பு என விமர்சித்திருந்தார்.

Also Read: CM Stalin: இன்று முதல் மாவட்ட வாரியாக ஆய்வு.. களத்தில் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

இதனிடையே இது தொடர்பாக பதில் அளித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக நலத்துறையின் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு தமிழக அரசின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக அந்த விளம்பரம் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என திருத்தப்பட்ட அறிவிப்பும் உடனடியாக பதிவு செய்யப்பட்டது.

இணையத்தில் தவறாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாய் மொழியாம் தமிழை உயிருக்கு மேலாய் மதிக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது.

நீதிமன்றம் மற்றும் மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்திற்கு மட்டுமே ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளில் தமிழ் மொழியில் பயின்று இருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக்காக திமுக அரசு செய்த பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்யும் நிலையில் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்த கூச்சல் போட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் மக்கள் ஏமாறப்போவதில்லை என கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Latest News